சனி, மார்ச் 24, 2012

கூடங்குளம் பிரச்சனைக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உறுபினர்கள் உள்பட 2000 பேர் கைது !

Vaiko and Seeman are arrested for Kudankulam matter.கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இடிந்தகரையில அணு உலை எதிர்ப்பாளர்கள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அதே வேளையில் அவர்களுக்கு ஆதரவாக பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இடிந்தகரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தனித்துவிடப்படவில்லை என்பதை உணர்த்தும் விதமாகவும், கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தியும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் பாளை மார்க்கெட் திடலில் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் இடிந்தகரை நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 
அதன்படி பாளை மார்க்கெட் திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் முன்னிலை வகித்தார். இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
 
மேலும் பா.ம.க. வியனரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு, பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி பாருக், மே.17 இயக்கம் திருமுருகன், அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு ஆண்டன்கோமஸ், காஞ்சி மக்கள் மன்றம் மகேஷ், தெகலான்பாகவி, தமிழர் தேசிய பொது உடைமை கட்சி மணியரசன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனத்தலைவர் அதியமான், புரட்சிகர இளைஞர் முன்னணிபெரியார்பித்தன், லெனின் கம்யூனிஸ்ட் சங்கர பாண்டியன், பேராசிரியர் தொ.பரமசிவம், நாகை திருவள்ளுவன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பைசல் அகமது ஆகியோரும் கண்டன உரையாற்றினார்கள்.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் நாசரேத் துரை, மாநில அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நிஜாம், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள், புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன், வக்கீல் சுப்புரத்தினம், அவைத்தலைவர் சுப்பையா, மனினல் முகமது அலி, வக்கீல் சுப்புரத்தினம், ததி.மு.ராஜேந்திரன், திவான், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மாவட்ட செயலாளர் கார்த்திக், நாம் தமிழர் கட்சி, பா.மக., பெரியார் தி.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும், மே17 இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லேனா குமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.
 
ஆர்ப்பாட்டம் நடந்த மார்க்கெட் திடலில் ரஷ்யா நாட்டில் நடந்த அணுஉலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் படங்கள் அடங்கிய 300 அடிநீள பேனரை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பிடித்தபடி நின்றனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து வாசக்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியபடி நின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் தமிழக அதிவிரைவுப்படை, சிறப்பு காவல்படை, சிறப்பு அதிரடிப்படை, நெல்லை மாநகர போலீசார் என நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக் கூடாது, நெய்வேலி அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தையும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும், கூடங்குளம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸ் மற்றும் துணை ராணுவப்படைகளை வாபஸ் பெறவேண்டும், கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் களும் நிறைவேற்றப்பட்டன.
 
இந்நிலையில் ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அதில் கலந்து கொண்ட அனைவரும் வைகோ தலைமையில் பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். வைகோ, சீமான் உள்பட 2,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக