மக்கள் எழுச்சிக்கு பிறகு நடந்த தேர்தலில் எகிப்து, துனிசியா ஆகிய நாடுகளில் இக்வானுல் முஸ்லீமின் என்று சொல்லப்படும் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு பெரு வெற்றி பெற்றது. மன்னராட்சியை கொள்கையளவில் எதிர்க்கும் இவ்வமைப்பு இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்ற சித்தாந்தம் கொண்டது.
இச்சூழலில் குவைத் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த கல்ஃபான் தனக்கு கிடைத்த தகவல்களின் படி வளைகுடா நாடுகளில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இக்வானுல் முஸ்லீமின் திட்டமிட்டிருப்பதாக கூறினார். மேலும் 2013ல் குவைத்தில் ஆரம்பித்து 2016க்குள் ஒட்டு மொத்த வளைகுடா நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
மேற்கத்திய உளவு நிறுவனங்களின் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தாம் இதை கூறுவதாக கல்ஃபான் கூறியுள்ளார். 2016ல் அனைத்து வளைகுடா நாடுகளிலும் தற்போது உள்ள அரச குடும்பத்தினர் அரசர்களாக இருந்தாலும் உண்மையான அதிகாரம் தங்களிடமிருக்குமாறு இக்வானுல் முஸ்லீமின் திட்டமிடுவதாக கல்ஃபான் கூறினார்.
துபையில் சிரிய அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் ஆர்ப்பாட்டக்காரர்களை சிரியாவுக்கு நாடு கடத்தியமைக்கு கத்தாரில் உள்ள இக்வானுல் முஸ்லீமின் ஆதரவு தலைவர்களுள் ஒருவரும் பிரபல மத தலைவருமான யூசுப் அல் கர்ளாவி விமர்சனம் செய்திருந்தார். அதை தொடர்ந்து யூசுப் அல் கர்ளாவியை கைது செய்ய போவதாக கல்ஃபான் சொன்னதை அடுத்து இக்வானுல் முஸ்லீமுடன் மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக