செவ்வாய், மார்ச் 27, 2012

காஸ்மியின் மனைவியிடம் அமலாக்கத்துறை இயக்குநரகம் விசாரணை!


புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக அதிகாரியின் காரில் குண்டுவெடித்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் ஸய்யத் முஹம்மது அஹ்மத் காஸ்மியின் மனைவி ஜஹானராவிடம் அமலாக்கத்துறை இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டது. காஸ்மிக்கும், அவரது மனைவிக்கும் வெளிநாட்டுப் பணம் வருவதாக        கூறப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து இவ்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அமலாக்கத்துறை இயக்குநரகம் காஸ்மியின் மனைவியிடம் வாக்குமூலம் பெற்று சில ஆவணங்களை வாங்கியது. காஸ்மி மற்றும் அவரது மனைவியின் அக்கவுண்டில் வரவு வைக்கப்பட்ட தொகையை குறித்து அமலாக்கத்துறை இயக்குநரகம் விசாரித்தது. தங்களின் அக்கவுண்டில் வந்த தொகை அனைத்தும் சட்டரீதியானது என்றும், துபாய் உள்ளிட்ட இடங்களில் இருந்து மகன் அனுப்பியது என்றும் காஸ்மியின் மனைவி கூறினார்.
காஸ்மியின் மனைவி சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் வங்கிகளில் இருந்து கிடைக்கும் அறிக்கைகள் ஆகியவற்றை கவனமாக ஆராய்வோம் என்று அமலாக்கத்துறை இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Foreign Exchange Management Act (FEMA) and Prevention of Money Laundering Act (PMLA) ஆகிய சட்டங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை இயக்குநரகம் விசாரணையை மேற்கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக