சனி, மார்ச் 31, 2012

ரெயில் கட்டண உயர்வு:நாளை அமலுக்கு வருகிறது-பிளாட்பார டிக்கெட் விலை ரூ. 5


பாராளுமன்றத்தில் கடந்த 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரெயில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏ.சி. வகுப்புகள், புறநகர் ரெயில்களில் முதல் வகுப்பு கட்டணம், பிளாட்பாரம் டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏ.சி. இரண்டடுக்கு கட்டணம் கிலோ மீட்டருக்கு 15 காசு உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி. முதல் வகுப்பு கட்டணம் கிலோ மீட்டருக்கு 30 காசு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

சீசன் டிக்கெட்டை இனி அதிகபட்சமாக 150 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே எடுக்க முடியும். இதற்கு இடைப்பட்ட எந்த தூரத்துக்கு எடுத்தாலும் பழைய கட்டணத்துடன் கூடுதலாக ரூ. 15 செலுத்த வேண்டும். முதல் வகுப்பு சீசன் டிக்கெட் 10 கி.மீ. வரை ரூ. 240 ஆக உள்ளது. அது ரூ. 255 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

பிளாட்பாரம் டிக்கெட் விலை தற்போது ரூ. 3 ஆக உள்ளது. அது ரூ. 5 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை (ஞாயிறு) முதல் அமலுக்கு வருகிறது. 

சென்னையில் இருந்து நெல்லைக்கு 2 அடுக்கு ஏ.சி.யில் செல்ல இதுவரை ரூ. 999 கட்டணம் இருந்தது. நாளை இந்த கட்டணம் ரூ. 1100 ஆக இருக்கும். அதுபோல நெல்லைக்கு முதல் வகுப்பு கட்டணம் ரூ. 835-ல் இருந்து ரூ. 905 ஆக உயர்ந்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், கோவை உள்பட நீண்ட தொலைவுக்கு செல்ல முன்பதிவு செய்திருந்தவர்களிடம் பழைய கட்டணம்தான் வசூலிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பயணத்தின்போது கூடுதல் கட்டணத்தை டிக்கெட் பரி சோதகர்களே வசூலிப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக