சனி, மார்ச் 31, 2012

பிரான்ஸ் அரசை பீடித்துள்ள இஸ்லாமாஃபோபியா: முஸ்லிம்கள் கூட்டாக கைது !

முஸ்லிம்கள் கூட்டாக கைதுபாரிஸ்:தீவிரவாத குற்றம் சுமத்தி பிரான்சில் ஏராளமான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு நகரங்களில் நடந்த ரெய்டுகளில் இவர்கள் கைதானார்கள். துலூஸ் மற்றும் அதன் சமீப பிரதேசங்களில் அண்மையில் நடந்த தாக்குதல்களில் 3 ராணுவத்தினரும், 3 குழந்தைகளும் மரணமடைந்ததை தொடர்ந்து தீவிர இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரால் இக்கைது நடவடிக்கை என்று இஸ்லாத்தின்
எதிர்ப்பாளரான பிரான்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி விளக்கம் அளித்துள்ளார்.
குறைந்தது 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸ் கூறுகிறது. துலூஸில் அதிகம் பேர் கைதாகியுள்ளனர். மேற்கு நகரங்களான நாண்டிஸ், லெ மான்ஸ், தெற்கு நகரமான நைஸ், பாரிஸின் பல்வேறு பகுதிகளில் ரெய்டும், கைதும் நடந்துள்ளதாக போலீஸ் கூறுகிறது.
அதேவேளையில், இக்கைது நடவடிக்கை துலூஸ் சம்பவத்துடன் தொடர்புடையது அல்ல என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ரெய்டு மற்றும் கைதுகள் தொடரும் என்று சர்கோஸி அறிவித்துள்ளார். மேலும் பலர் கைதாவார்கள் என்று கூறியுள்ள சர்கோஸி வேறு சில நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். துலூஸ் தாக்குதல் 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்கு சமமானது என்று வர்ணித்துள்ளார் சர்கோஸி. சிலரை நாட்டைவிட்டு வெளியேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேவேளையில், வரவிருக்கும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சர்கோஸி இத்தகைய நடவடிக்கைகள் மூலம் நாடகமாடுவதாக கூறப்படுகிறது. பெரும் பொருளாதார நெருக்கடியில் பிரான்சு சிக்கியுள்ள சூழலில், அதனைவிட பாதுகாப்பு முக்கியமானது என்று மக்களை திசைதிருப்பும் நோக்கில் இத்தகைய நடவடிக்கைகளை சர்கோஸி மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
ஏப்ரல் 22-ஆம் தேதி அதிபர் தேர்தலுக்கு முன்பாக புதிய தீவிரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்படும் என்று சர்கோஸி அறிவித்துள்ளார். துலூஸில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் முஹம்மது மீராவை அவசரப்பட்டு கொலைச்செய்த நடவடிக்கை பலருக்கும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக