புதன், மார்ச் 21, 2012

சீர்திருத்த பரிந்துரைகள் அமல்: பஹ்ரைன்!


 மனாமா:பஹ்ரைன் அரசு முன்னர் நியமித்த கமிஷனின் பெரும்பாலான பரிந்துரைகளை அமல்படுத்தியுள்ளதாக மீளாய்வு கமிட்டி அறிக்கை அளித்துள்ளது.
எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் கொடுமைகளை குறித்து விசாரணை நடத்தல், அநியாயமாக கைது செய்வதை நிறுத்துவது,
ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்ட வழக்குகளை மறுபரிசீலனை செய்வது உள்ளிட்ட கமிஷனின் சிபாரிசுகளில் 90 சதவீதமும் அமல்படுத்தியுள்ளதாக பஹ்ரைன் ஆட்சியாளர் ஹமத் பின் ஈஸா அல் கலீஃபா மன்னருக்கு அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அலி ஸாலிஹ் அல் ஸாலிஹின் தலைமையிலான குழு, பஹ்ரைன் சுதந்திர விசாரணை கமிஷனின்(பி.ஐ.சி.ஐ)சமர்ப்பித்த சிபாரிசுகள் எவ்வளவு தூரம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதை பரிசோதிக்க நியமிக்கப்பட்டது. சிபாரிசுகள் பெரும்பாலானவை அமல்படுத்தியது குறித்த அறிக்கை வரவேற்கத்தக்கது என்று ஆட்சியாளர் ஹமத் கூறியுள்ளார். நாம் காணவிரும்பிய பலன் மிக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக மன்னர் கூறுகிறார்.
அதேவேளையில், எதிர்கட்சிகள் மீளாய்வு குழுவின் அறிக்கையை நிராகரித்துள்ளன. 13 மாதங்களாக தொடரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு உளப்பூர்வமாக விரும்பினால் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலைச் செய்ய தயாராகவேண்டும். வெறுமனே பி.ஐ.சி.ஐ சிபாரிசுகளை அமல்படுத்தினால் மட்டும் பிரச்சனை தீர்ந்துவிடாது. மனித உரிமை மீறல்கள் குறித்து மட்டுமே பி.ஐ.சி.ஐ விசாரணை நடத்தியது. அரசியல் சீர்திருத்தங்கள் கோரித்தான் பஹ்ரைன் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்று எதிர்கட்சியினர் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக