ஓய்வுக்கு பின்னர் சொந்த ஊரான சேலத்திற்கு சென்றுவிட்டார் நடேசன்.
சென்னையில் தனது பெயரில் உள்ள ரேஷன் அட்டையில் இருந்து தனது பெயரையும், மனைவியின் பெயரையும் நீக்கி சான்றிதழ் அளிக்கும்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி உணவு வழங்கல் துறையின் வில்லிவாக்கம் இணை ஆணையாளரிடம் விண்ணப்பித்தார் நடேசன். அதன்படி 2011ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அவருக்கு பெயர் நீக்கம் மற்றும் இடமாற்ற சான்று வழங்கப்பட்டது.
இந்த சான்றிதழுடன் புதிய ரேஷன் அட்டைக்கு உணவு வழங்கல் துறையின் சேலம் இணை ஆணையாளரிடம் பிப்ரவரி 1ஆம் தேதி நடேசன் விண்ணப்பித்தார். 2 வாரம்கழித்து வாருங்கள் என்று சம்பந்தப்பட்ட அலுவலர் கூறியதை தொடர்ந்து, இரண்டு வாரம் கழித்து சேலம் இணை ஆணையர் அலுவகத்துக்குச் சென்று ரேஷன் அட்டை கேட்டார் நடேசன்.
அப்போது, சென்னை அலுவலகத்தில் உங்களது ரேஷன் அட்டையை திரும்பக் கொடுத்த விவரங்கள் எதுவும் ஆன்லைனில் பதிவாகவில்லை என்று கூறிய அலுவலர், மீண்டும் ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்று அனுப்பி விட்டார் அந்த முதியவரை.
ஒருவாரம் கழித்து மீண்டும் சென்று ரேஷன் அட்டை கேட்டபோது, அதே பதிலை கூறி முதியவரை அனுப்பிவிட்டார் அலுவலர். இதனால் சேலத்தில் இருந்து சென்னைக்கு பயணமானார் முதியவர் நடேசன். சேலம் அலுவலர் கூறியபடி, சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள உணவு வழங்கல் துறை இணை ஆணையாளரிடம் சென்று அந்த விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய கோரினார்முதியவர்.
நாங்கள் பதிவு செய்து கொள்கிறோர், நீங்கள் போங்கள் என்று முதியவரை அனுப்பி விட்டார் சம்பந்தப்பட்ட அதிகாரி. சில நாட்கள் கழித்து சேலத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது மீண்டும் அதே பதில். இன்னும் ஆன்லைனில் பதிவு செய்யப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக