எகிப்தின் மக்கள் எழுச்சிக்கு பின்னர் தனது முதல் பயணத்தை மேற்கொண்டு எகிப்து சென்றுள்ளார். அதன் போது மக்களினால் அவருக்கு அமோக வரவேற்று வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது விஜயத்தின் போது எகிப்தின் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் முக்கிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுளார். கடந்த 2007 ஆம் ஆண்டு காசாவை இஸ்ரேல் முற்றுகை இட்டு தனது முழு அளவிலான தடைகளை விதித்ததை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பு பிரதமர் எகிப்திற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருப்பது இது முதல் முறையாகும்.
காசா பகுதியை கட்டியெழுப்பும் நோக்கில் பிராந்திய நாடுகளிடம் உதவிகளை கோருவதே இந்த சுற்றுப் பயணத்தின் பிரதான நோக்கம் என ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது இஸ்மைல் ஹனியான் எகிப்து, சூடான், துனீஷியா, கட்டார், பஹ்ரைன் மற்றும் துருக்கி நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதன் முதல் கட்டமாக எகிப்து சென்றுள்ள இஸ்மைல் ஹனியான் நேற்று முன்தினம் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைமையகத்திற்கு சென்று அதன் தலைவர் மொஹமட் பாடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு பலஸ்தீன விவகாரம் குறித்து எப்போதும் கரிசணை காட்டி வருகிறது என்று அந்த அமைப்பின் தலைவர் மொஹம்மத் பாடி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த எகிப்து பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு இரண்டு கட்ட வாக்கெடுப்புகளிலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பு இஸ்ரேலுக்கு குழப்பத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கும் என ஹமாஸ் முன்னணி தலைவர் ஹனியான் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை சலபிகள் அரசியல் கட்சியான அந்நூர் பிரமுகர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்பதாக எகிப்து தகவல்கள் தெரிவிக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக