புயல் கரையைக் கடந்த காரணத்தால் கன மழையும் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் கடும் சூறாவளிக் காற்றும் வீசி வருகிறது.
இந்தப் பகுதியில் கடல் அலைகள் 2 மீட்டர் உயரத்துக்கு எழுந்து வருகின்றன.
புயலால் புதுச்சேரியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடலூர் பகுதியிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் வலுவிழந்து மேற்கு நோக்கி நகர்வதால், திருவண்ணாமலை, தருமபுரி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்யும்.
புயல் பாதிப்பு குறித்து அறிய எண்கள்:
புயல் பாதிப்பு குறித்து அறிய சென்னை வானிலை ஆய்வு மையத்தை 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்த மக்கள் 1800 எண்ணிலும் தொடர்பு கொண்டு புயல் எச்சரிக்கை குறித்த தகவல்களைக் கேட்கலாம்.
மேலும் சென்னை மாநகராட்சி தகவலுக்கு எண் 1913, திருவள்ளூர் மாவட்ட தகவலுக்கு: 27661200 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக