‘ஈரானுக்கு மேலும் தடை விதித்தால் ஒரு துளி எண்ணை கூட ஹெர்முஸாவி னூடாக செல்லாது’ என்று துணை ஜனாதிபதி ரஹிமி குறிப்பிட்டார். ஈரான் அரச ஊடகமான இர்னா வெளியிட்ட இந்த செய்தியில் ரஹிமி மேலும் கூறியதாவதுஇ
‘நாங்கள் எதிரான செயல்களிலோ வன்முறைகளிலோ ஈடுபடவில்லை. ஆனால் மேற்கு நாடுகள் தனது திட்டங்களில் இருந்து பின்வாங்கவில்லை. எதிரிகளை நாம் முறியடித்தால் தான் அவர் தமது திட்டத்திலிருந்து பின்வாங்குவார்கள்’ என்றார்.
ஹெர்முஸ் ஊடாக நாளொன்றுக்கு 15 மில்லியன் எண்ணெய் பீப்பாய்கள் பயணிக்கின்றன. இது சர்வதேச சந்தைக்கு நாளொன்றுக்கும் செல்லும் மூன்றில் ஒரு எண்ணெய் பீப்பாய்க ளாகும்.
இந்நிலையில் ஈரான் கடற்படை இந்த பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு வருவது எண்ணெய் கப்பல்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில் ஈரான் கடற்படை இந்த பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு வருவது எண்ணெய் கப்பல்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக