புதன், டிசம்பர் 28, 2011

எகிப்தை ஆளத் தயாராகும் இஸ்லாமிய கட்சிகள்


 இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி அரசியல் யாப்பை வரைவதற்குமுன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டும் என்ற சில ஆர்பாட்டகாரர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. யாப்பை வரை
ய முன்னர் இராணுவ நிர்வாகம் தனது அதிகாரத்தை துறந்து அதனை பொது மக்களில் ஒருவருக்கு வழங்க வேண்டும் அவர் இடைக்கால ஜனாதிபதியாக செயல்பட வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் ஈடுபடும் சிறிய அமைப்புக்கள் கூறிவருகின்றது. இதற்கு பதில்வழங்கியுள்ள இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு யாப்பை வரைய முன்னர் ஒருவரை ஜனாதிபதியாக நியமித்தால் அவர் ஹுஸ்னி முபாரக்கை விடவும் சர்வாதிகாரதன்மையுடன் செயல்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அடுத்த வருடம் ஜூன் மாதம் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அமைப்பு யாப்பு வரைபு தொடர்பான பிரகடனம் பாராளுமன்றத்தின் தலைவரை ஜனாதிபதியாக நியமிப்பது இல்லை என்ற தீர்மானத்தை மதிப்பதாகவும் ஆனால் பாராளுமன்றத்தின் தலைவர் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால் அவர் இஹ்வானுல் முஸ்லிமீன் உறுப்பினராக இருப்பார் என்று தெரிவத்துள்ளது.
இஹ்வானுல் முஸ்லிமீன் ஆரம்பம் தொடக்கம் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தெரிவித்துவந்துள்ளது , சில தினங்களுக்கு முன்னர் எந்த ஜனாதிபதி வேட்பாளரை தான் ஆதரிப்பது என்று ஆராய்வதாக தெரிவித்தது, தற்போது பாராளுமன்றத்தின் தலைவர் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால் அவர் இஹ்வானுல் முஸ்லிமீன் உறுப்பினராக இருப்பார் என்று தெரிவத்துள்ளது.
இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடபோவதில்லை என்ற நிலைப்பாட்டை மாற்றவேண்டும் என்று பலர் கூறிவருகின்றனர், துருக்கி ஆளும் தரப்பும் இது தொடர்பாக இஹ்வானுல் முஸ்லிமீன் மீளாய்வு செய்யவேண்டும் என்று கூறியுள்ளதாக எகிப்து பத்திரிகை ஒன்று தெரிவித்திருந்தது. பலரும்  இஹ்வான்கள் இருக்கும் சந்தர்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று கருதுகின்றனர்.
நடத்து முடிந்துள்ள பாராளுமன்ற கீழ் சபைக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி  4,058,498 வாக்குகளையும், சலபிகள் அரசியல் கட்சியான அந்நூர் 3,216,430 வாக்குகளையும் பெற்று முதலாம் இரண்டாம் இடங்களில் உள்ளது .
அந்நூர் அரசியல் கட்சி  ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களம் இறக்க திட்டமிட்டுள்ளது. இரண்டு இஸ்லாமிய அமைப்புகளும் களத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களை நிறுத்தாமல் ஒரு அமைப்பு நிறுத்துவது சிறந்தது என்றும் இஸ்லாமிய அரசியல் விமர்சகர்கள்  தெரிவித்துள்ளதுடன் நிறுத்தும் மற்றும் ஆதரிக்கும் விடயத்தில் இஹ்வான்கள்   மிகவும் வெற்றிகரமான பாதையில் தீர்மாங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர் .
அதேவேளை அந்நூர் கட்சி   தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை எதிர்ப்பதாகவும் யாப்பு வரைவதற்கான சபை உருவாக்கப்படும்போது யாப்பின் மூலம் ஜானதிபதி ஒருவர் அதி கூடிய அதிகாரங்களை வைத்திருக்க ஏதுவான மாற்றங்களை செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளது .
இஹ்வானுல் முஸ்லிமீன் , அந்நூர் ஆகிய இரண்டு இஸ்லாமிய அரசியல் கட்சிகளும் புதிய அரசியல் யாப்பு வரையும் போது அதிகூடிய செல்வாக்கை செலுத்தும் என்று லிபரல் , மற்றும் மதசார்பற்ற சிறிய அமைப்புகள் அச்சம்  தெரிவித்துள்ளது . ஆனால் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு புதிய யாப்பு உருவாக்கத்தின் போது எகிப்தின் அனைத்து தரப்புகளின் கோரிக்கைகளும் கவனத்தில் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளதுடன் லிபரல் , மற்றும் மதசார்பற்ற சிறிய அமைப்புகளுடன்   கூட்டணியாக செயல்பட்டு வருகின்றது.
 அதேவேளை அந்நூர் கட்சியின் தலைவர் அப்துல் கபூர் நேர்காணல் ஒன்றில் உங்களில் கட்சி எகிப்துக்கும்  இஸ்ரேலுக்கும் இடையிலான உடன்படிக்கையை கிழித்து வீசி விடுமா அல்லது மாற்றத்திற்கு உட்படுத்துமா ?   என்று வினவியபோது இல்லை நாங்கள்  உடன்படிக்கைகளை மதித்து நடப்போம் செய்யப்பட்டுள்ள உடன்படிக்கையில் பல சரத்துக்கள் செயல்படுத்தப் படாமல் உள்ளது , பலஸ்தீனுக்கு சுதந்திரம் , சுய ஆட்சி, பலஸ்தீன மண்ணில் பலஸ்தீன் ஒரு தனிநாடு என்பன அந்த உடன்படிக்கையின் செயல்படுத்தப்படாத சரத்துக்கள் அவற்றை இஸ்ரேலை அமுல்படுத்த கோருவோம் என்று     தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற கீழ் சபைக்கான மூன்றாம் கட்ட தேர்தல் ஜனவரி மூன்றாம் திகதி ஆரம்பமாகின்றது . பாராளுமன்ற கீழ் சபை ஜனவரி 23 ஆம் திகதி பதவி ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக