அதற்காக ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர்கள், செல்வாக்கான தொழில் அதிபர்கள் மற்றும் சினிமாத் துறையினர் முறைகேடு செய்வது இல்லை என்று அர்த்தம் கிடையாது. அவர்களை நெருங்க அரசுக்கு ஒரு வித பயம். ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் துணிச்சல் மத்திய அரசுக்கும் வருமானவரித் துறையினருக்கும் வரப் போவதில்லை. ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரேவை டெல்லிக்கு சென்று நேரில் சந்தித்து வந்தார் நடிகர் விஜய். சென்னை வந்த அன்னா ஹசாரேவை அவர் படம் பார்த்த தியேட்டரில் சென்று சந்தித்தார் தேசப்பற்று(!) நடிகர் அர்ஜூன்.
அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தம் கல்யாண மண்டபத்தைத் தந்து தம் ஆதரவைத் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினி காந்த். மூவரும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்துக்கு முறையாக வருமான வரி கட்டி வருகின்றனரா என்பது யார் அறிவார்? இதைத் தான் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் துணிச்சலாக கேட்டுள்ளார். ரஜினி தரப்பில் இருந்து இது வரை பதில் இல்லை. மடியில் கனமில்லையேல் பயமெதற்கு? ரஜினி உட்பட அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விஜய், அர்ஜூன் போன்றவர்கள் தங்களின் கடந்த கால வருமானவரித் துறை கணக்குகளை தங்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும். இல்லையேல் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியது உண்மைதான் என்றே நாம் நம்ப வேண்டி இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக