ஞாயிறு, மார்ச் 18, 2012

ஒரிசாவில் இத்தாலி சுற்றுலா பயணிகள் 2 பேர் கடத்தல்: மாவோயிஸ்டுகள் அட்டகாசம்


சத்தீஷ்கர், ஒரிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல் மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது. 

 இந்த நிலையில் ஒரிசாவில் இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 2 பேரை மாவோயிஸ்டு இயக்கத்தினர் கடத்தி சென்று உள்ளனர். கந்தமால் மாவட்டம் தரிங்கபாடி பகுதியில் இத்தாலிய சுற்றுலா பயணிகள் கடத்தி செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. 

மொத்தம் 4 பேர் கடத்தப்பட்டனர். உள்ளூரை சேர்ந்த 2 பேரை விடுவித்து விட்டனர். இத்தாலியை சேர்ந்த 2 பேரை மட்டும் பிணை கைதிகளாக மாவோயிஸ்டுகள் பிடித்து வைத்து உள்ளனர். அவர்களில் ஒருவர் பெயர் பாஸ்கியூசோ போலோ, மற்றொருவர் பெயர் கிளாடியோ. இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு பெண் ஆற்றில் குளிப்பதை போட்டோ எடுத்ததாகவும் அதனால் அவர்கள் கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இத்தாலியர்கள் 2 பேரையும் விடுவிக்க மாவோயிஸ்டுகள் நிபந்தனையை விதித்துள்ளனர். சிறையில் உள்ள மாவோயிஸ்டுகளை விடுவிக்க வேண்டும், தங்கள் மீதான தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும் என்பது அவர்களது நிபந்தனையாகும்.

இன்று மாலைக்குள் தங்களுக்கு எதிரான வேட்டையை நிறுத்தினால்தான் பேச்சுவா¢ர்த்தைக்கு வருவோம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர். கடத்தபபட்ட இத்தாலிய சுற்றுலா பயணிகள் இருவரையும் மீட்கும் பணியில் மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். 

வெளிநாட்டை சேர்ந்தவர்களை மாவோயிஸ்டுகள் கடத்துவது இதுவே முதல் முறையாகும். மாவோயிஸ்டுகளின் கடத்தல் சம்பவம் நடந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கலெக்டர் ஒருவர் கடத்தப்பட்டார். 8 நாட்களுக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக