மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று இரவு, பெங்களூரிலிருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்தார்.
அப்போது அளித்த பேட்டி: கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பதற்குத் தயாராக இருக்கிறது. அதன், முதல் அணு உலை அடுத்த 15 நாட்களிலும், இரண்டாவது அணுஉலை அடுத்த இரண்டு மாதங்களிலும், மின் உற்பத்தியைத் துவங்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராகச் செயல்பட்டு வரும் உதயகுமார் போன்றோர்களுக்கு, மக்களின் ஆதரவு தற்போது குறைந்து விட்டது. கடுமையான மின் வெட்டு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்கள், உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர். எனவே, உதயகுமார் கோஷ்டியினர் மக்களைக் கண்டு பயந்து ஓடி ஒளிகின்றனர். மக்களும் இவர்களை, ஓடஓட விரட்டத் துவங்கிவிட்டனர். தமிழக அரசு அமைத்துள்ள நிபுணர்குழுவும், கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று அறிக்கை கொடுத்துவிட்டது. எனவே, வெகுவிரைவில் தமிழக அரசின் முழுஒத்துழைப்போடு கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தியைத் துவங்க இருக்கிறது. இவ்வாறு நாராயணசாமி பேட்டி அளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக