வியாழன், டிசம்பர் 15, 2011

மேற்கு வங்கத்தில் விஷ சாரயம் குடித்து ஒரே கிராமத்தைச் சேர்ந்த 80 பேர் பலி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் தெற்கு பர்கானா மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து ஒரே கிராமத்தைச் சேர்ந்த 80 பேர் உயிரிழந்துள்ளனர். விஷசாரயம் விற்ற நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தெற்கு பர்கானா மாவட்டத்தில் உள்ள மொகராகாட் கிராமத்தில் வசிக்கும் மக்கள் அங்குள்ள சாராயக்கடையில்

சாராயம் வாங்கி குடித்துள்ளனர். இதில் ஏராளமானோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. சாராயம் குடித்த பலரும் ஆங்காங்கே மயங்கி விழுந்து உயிரிழந்த பின்பே அவர்கள் குடித்தது விஷசாராயம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோர், வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள்
பலரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

உறவினர்கள் ஆத்திரம்

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால் அவர்களின் உறவினர்கள் ஆத்திரமடைந்து அங்கிருந்த சாராயக்கடைகளை அடித்து நொறுக்கினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மேற்கு வங்க அரசு தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. விஷ சாராயம் விற்ற நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அடுத்தடுத்த சோகம்

சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் உள்ள எஎம்ஆர்ஐ மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில், 91 பேர் பலியான சோகம் மறைவதற்குள், கள்ளச் சாராயம் குடித்து, ஒரே கிராமத்தைச் சேர்ந்த 80 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக