செவ்வாய், பிப்ரவரி 26, 2013

ஹைராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பு: ஊடகங்கள் சற்றும் மாறவில்லை – ரயீசுத்தீன்!

ஹைதராபாத்:2007-ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு ஊடகங்கள் கடைப்பிடித்த போக்கு சற்றும் மாறவில்லை என்று அநியாயமாக ஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பு வழக்கில் போலீசாரால் பிடிக்கப்பட்டு பின்னர் விடுதலையான முஹம்மது ரயீசுத்தீன் கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை காலையில்  போலீஸ் ரயீசுத்தீனை விசாரணைக்காக பிடித்துச் சென்றது. பின்னர் அன்றைய தினம் இரவு வெகு நேரம் கழித்தே விடுவித்தது.
பயங்கரவாதி முஹம்மது ரயீஸ் கைது என்று ஒரு தெலுங்கு நியூஸ் சானல் செய்தி வெளியிட்டது. ரயீஸுத்தீன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஹைதராபாத் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையின் வேகம் அதிகரித்துள்ளதாக பிரபல செய்தி நிறுவனமான ஐ.எ.என்.எஸ் செய்தி வெளியிட்டது.
“ஊடகங்கள் சற்றும் மாறவில்லை - அன்றும் (மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு) எங்களை அவர்கள் தீவிரவாதிகளாக பிரகடப்படுத்தினார்கள். இன்றும் அறிவிக்கின்றார்கள்”  என்று  ரயீசுத்தீன் கூறுகிறார்.
மேலும் அவர் கூறியது: குண்டுவெடிப்புக் குறித்த விசாரணையில் முக்கிய கதாபாத்திரமாக ஊடகங்கள் அறிமுகப்படுத்தும் ஸைது மக்பூலுடனான தொடர்பைக் குறித்து போலீஸ் முக்கியமாக விசாரித்தது. 2007-ஆம் ஆண்டு ஷாஹித் பிலால் குறித்து விசாரித்தார்கள். தற்போது மக்பூலைக் குறித்து விசாரிக்கிறார்கள். 2007-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் ஷாஹித் பிலால் காரணமல்ல என்பது நிரூபணமானது.தற்போது நடந்த குண்டுவெடிப்பின் உண்மையான குற்றவாளி யார்? என்பதை கண்டுபிடிக்கவேண்டும்.இவ்வாறு ரயீசுத்தீன் கூறினார்.
சட்டரீதியான நடவடிக்கைகள் எதனையும் பேணாமல் ரயீசுத்தீனை போலீஸ் பிடித்துச் சென்றது. ரயீசுத்தீனுடன் பிடித்துச் செல்லப்பட்ட முஹம்மது அஸ்மத், அர்ஷத் கான், அப்துல் ரஹீம், அப்துல் கரீம் ஆகியோரையும் போலீஸ் விடுவித்துள்ளது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக