புதன், பிப்ரவரி 06, 2013

சினிமா துறையா? சர்ச்சைகள் துறையா?

இயக்குனர் மணி ரத்தினம் இயக்கிய கடல் படம் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. இந்த படம் கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  சிந்திக்கவும்: ரோஜா முதல் மும்பை வரை முஸ்லிம்களை தாக்கி படம் எடுத்தார் மணி ரத்தினம். இப்பொழுது கிறிஸ்தவர்களை தாக்கி படம் எடுக்கிறார். ஒரு படத்தில் ஒரு சமூகத்தை கேவலமாகவோ அல்லது புண்படுத்தியோ வரும் காட்சிகள் அந்த இயக்குனர் அறியாமல் செய்து விட்ட  பிழையாக எண்ணி விட முடியாது.  இவர்கள், அறிந்தேதான் நச்சி கருத்துகளை பஞ் டயலாக் மாதிரி, குத்தி காட்டுவது போல், அல்லது அந்த படத்தை பார்க்கும் பொழுது அந்த காட்சிகள் எல்லோர் மனதிலும் பதியும்படி வடிவமைக்கிறார்கள். இதுவெல்லாம் அவர்கள் அறிந்தே, தெரிந்தே! சொருகும் வசனங்களும், காட்சிகளுமே ஆகும். 

சினிமா மக்களை மகிழ்விக்க எடுக்கபடுவது, நாங்கள் மக்கள் கலைஞசர்கள், மக்களை மகிழ்விப்பவர்கள் என்று நடிகர்கள், தயாரிப்பாளர்கள் சொல்வது உண்மையாக இருந்தால்? அது எல்லா தரப்பு மக்களையும் சந்தோசப்படுத்தும், மகிழ்விக்கும் ஒரு ஊடகமாக இருக்க வேண்டும். அதைவிட்டு  சர்ச்சைக்கூரிய ஊடகமாக இருக்க கூடாது.

இயக்குனர் பாரதி ராஜா, பல்வேறு கிராமத்து கதைகளை தந்தவர். அது போல் டைரக்டர் சங்கர், தங்கர் பச்சன், சேரன், பாலா, ரவிகுமார், பாலாஜி, sp முத்துராமன் இப்படி சிறந்த டைரக்டர்கள் ஒருபுறமும். கே.பாலச்சந்தர், மணி ரத்தினம், கமல ஹாசன் போன்ற கேவலமான தயாரிப்பாளர்கள் மறுபுறமும் என்று தமிழ் சினிமா காட்சி அளிக்கிறது.

கே.பாலச்சந்தர் குடும்ப உறவுகளை சிதைக்கும் படங்களை தயாரித்து  மேலை  நாட்டு  கலாச்சாரத்தை தமிழில்  இறக்குமதி செய்தவர். மணி ரத்தினம் உண்மைகளை மறைத்து சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து தாக்கும் படங்களை எடுத்து சர்ச்சைக்குள்ளானவர். கமல ஹாசன் லிவிங் டுகெதர் என்கிற கல்யாணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்வதை, கவுதமி மூலம் தமிழ் சமூகத்திற்கு கற்று கொடுத்தவர். 
எந்த மதத்தையும் பற்றி படம் எடுக்கலாம் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் படங்கள் எல்லாம் இப்படியா சர்ச்சைகளை ஏற்படுத்தியது. எல்லா மதத்தினரும் விரும்பி பார்த்தார்கள். தமிழகத்தின் ஜேம்ஸ்பாண்ட் ஜெயசங்கர் படமெல்லாம் யாரையும் தாக்கி எடுக்க பட வில்லையே. ஆனால் நம்ம புல் தடுக்கி கேப்டன் விஜகாந்த் மட்டும் தீவிரவாதிகளோடு சண்டை போட்டு எதிர் கட்சி தலைவர் ஆகி விட்டார். விஜயகாந்த் மாதிரி எல்லோரும் ஏதோ ஒரு லாபத்தை கருதியே இப்படி படம் எடுக்கிறார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

அட நம்ம ரஜினிகாந்த்! இவரால் யாருக்கும் பிரோஜனம் இல்லாவிட்டாலும் தொந்தரவு இல்லை. மதவாதியான உள்ளூர் சூப்பர் ஸ்டாருக்கு பிற மதத்தினரை மதிக்க தெரிந்திருக்கிறது. ஆனால் முற்போற்க்கு சிந்தனைவாதியான உலக நாயகனுக்கு பிற மதத்தினரை  நன்றாக  மிதிக்க தெரிந்திருக்கிறது. எந்த சமூகத்தை பற்றியும் படம் எடுக்கலாம் அதில் ஒரு நடுநிலைமை பேணினால் இது போன்ற சர்ச்சைகள் வராது. கலை என்பது மக்களுக்காக என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதில் பாராபட்சம் எதற்கு?
 2

1 கருத்து: