புதன், பிப்ரவரி 06, 2013

விஜய்காந்தை பார்த்து முதல்வர் இடைவிடா சிரிப்பு !

தே.மு.தி.க தலைவர் விஜய்காந்த் சட்டசபையில் நடந்துகொண்டதைப் பார்த்து முதல்வர் ஜெயலலிதா இடைவிடாமல் சிரித்துக்கொண்டே இருந்தார்.தமிழக சட்டசபையில் நேற்று நடந்த ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது விஜயகாந்த்தை பலரும் சரமாரியாக விமர்சித்தனர். இதில் விஜயகாந்த்தை, அதிமுக எம்.எல்.ஏ விஜயபாஸ்கர் சட்டசபையில் கடுமையாக தாக்கிப் பேசியதைக் கேட்டு முதல்வர் ஜெயலலிதா இடைவிடாமல் சிரித்தபடி ரசித்துக் கேட்டார்.இந்த நிலையில் விஜய்காந்த் குறித்து அதிமுக எம்.எல்.ஏ விஜயபாஸ்கர் கதை ஒன்று சொன்னார்.

அதாவது, "ஒரு எக்ஸ்பிரஸ் இரயில் தமிழகத்திலிருந்து டெல்லி சென்று கொண்டிருக்கிறது. அதில் சென்ற ஒரு குழுவினர் வழியில் ஒரு ஸ்டேஷனில் தவறி இறங்கிவிட்டனர். ஆனால் குழுவின் தலைவன் நிதானமில்லாமல், கூட வந்தவர்களின் தலையை தட்டுகிறார், நாக்கை துருத்தி கடிக்கிறார். ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று, அடுத்த இரயில் எப்போது வரும்? என கேட்க மாலை 6:00 மணிக்கு வரும் என்கிறார். அப்படியா என கேட்டுவிட்டு பக்கத்தில் ஒரு ரவுண்டு போய் வருகிறார். இப்படியே ஐந்து ரவுண்டு போகிறது.

மீண்டும் இரயில் எப்ப வரும்? என்று ஸ்டேஷன் மாஸ்டரிடம் கேட்க இனிமே இரவு 9:00 மணிக்கு தான் இரயில் வரும். ஆமாம், நீங்க எங்க தான் போகணும்? என ஸ்டேஷன் மாஸ்டர் திருப்பி கேட்க, அதற்கு தண்டவாளத்தை கடக்க வேண்டுமென தலைவன் கூற, அட கொடுமையே என ஸ்டேஷன் மாஸ்டர் தலையில் அடித்துக் கொண்டார். இந்த சம்பவத்தில் 29 பேரில் 4 பேரை காணாமல் போக அவர்களோ எக்ஸ்பிரஸ் இரயிலில் புத்திசாலித்தனமாக பயணிப்பது பின்னர் தெரிந்தது. நாக்கில் வந்ததையெல்லாம் மைக்கில் பேசி வரும் நாக்கு கடி நாராயணன் நீதிமன்றங்களுக்கு நடையாய் நடக்கிறார்.

நிருபர்கள் வாய் வழியே கேள்வி கேட்டால் கை வழியே பதில் சொல்லும் பழக்கத்தை கொண்ட வைகை கரை வாத்து, முன்பிணைக்கு முண்டி அடிக்கிறது. என்னதான் முண்டி அடித்தாலும் அது போய் சேரும் இடம் செங்குன்றத்திற்கு அருகில் உள்ளது.அவரை நினைக்கும்போது “உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது, உன்னைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது” என்ற எம்.ஜி.ஆர் பாடல் தான் நினைவுக்கு வருகிறது" என்று கூறினார்.
2


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக