வெள்ளி, பிப்ரவரி 22, 2013

மெக்கா மஜ்ஸித் போல ஹைதராபாத் குண்டுவெடிப்பில் 'இந்து' தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு ?

ஹைதராபாத்தில் நிகழ்ந்திருக்கும் தற்போதைய இரட்டைக் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 'இந்து' தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

2007-ம் ஆண்டு மே 18-ந் தேதியன்று ஹைதராபாத்தின் வரலாற்று சிறப்புமிக்க மெக்கா மஸ்ஜித் மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 9 பேர் பலியாகினர். பின்னர் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 5 பேர் பலியாகினர். தற்போது போலவே முதலில் ஹூஜி தீவிரவாத இயக்கம் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் 12 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பின்னர் தேசியப் புலனாய்வு முகாமையகம் இந்து தீவிரவாத இயக்கத்தினர் 6 பேரை இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்தது. தற்போதும் ஹூஜி, இந்திய முஜாஹிதீன்கள் என்ற கோணத்தில் விசாரணை செல்கிறது. இருப்பினும் இந்த சம்பவத்தில் இந்து தீவிரவாத அமைப்புகளுக்கான தொடர்பு பற்றியுமான கோணமும் விசாரணைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது.


1 கருத்து: