வெள்ளி, பிப்ரவரி 22, 2013

ஹைதராபாத் குண்டுவெடிப்பு அரசியல் நாடகமா?

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் 3 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சுமார் 13 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் ஆந்திரவில்  பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 


குண்டு வெடிப்புகளை நடத்தியது யார் என்று கண்டு பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அதே நேரம் குண்டு வெடித்ததும், அதன் கை ஒரு குறிப்பட்ட சமூகத்தை நோக்கி நீள்வது  இந்த முறை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். 

குண்டு வெடித்த உடனேயே சொல்லி வைத்தாற்போல் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் காசாபின் தூக்குக்கு பதிலடியாக நடத்தப்பட்டது என்று துப்பறிந்து சொல்லி இருப்பது இங்கே கவனிக்கப்பட வேண்டியது. இவரை தொடர்ந்து குஜராத் மோடி,பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் போன்றோரின் உடனடி பரபரப்பு அறிக்கைகளும் நம்மை யோசிக்க வைக்கின்றனர்.

இந்தியாவில் இதுவரை நடந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா தீவிரவாதிகளே இருந்துள்ளனர் என்பதை தேசிய புலனாய்வுத்துறை கண்டுபிடித்தது.  அதனடிப்படையில் ஹிந்துத்துவா பெண் சாமியார் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய பிரமுகர்கள் சிறையில் இருக்கின்றனர். RSS இயக்கம்தான் இந்த குண்டு வெடிப்பபை  நடத்தியது என்று கருத்து தெரிவித்த ஷிண்டேயை மன்னிப்பு கேட்க்கும்படி ஹிந்துத்துவா இயக்கங்கள் போர்க்கொடி தூக்கின. அவர்களை சமாதானப்படுத்தவே அப்சல் குரு தூக்கில் இடப்பட்டார். 

அப்சல் குரு தூக்கில் இடப்பட்டதற்கு நாடு முழுவதிலும் உள்ள மனித உரிமை இயக்கங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பல்வேறு இடங்களில் ஆர்பாட்டங்கள் நடந்துள்ளது. இந்நிலையில் தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இருந்து செயல்பட்டது என்ற தனது கருத்துக்கு மன்னிப்பு கோரி மிதவாத ஹிந்துத்துவா கட்சியான காங்கிரஸ் தீவிரவாத ஹிந்துதுவாவிடம் மண்டியிட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் இந்த குண்டு வெடிப்பு நடந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்ப்படுத்துகிறது. 

இந்த குண்டு வெடிப்பு யாரையும் சமாதானப்படுத்தவா?  எதையாவது மறைக்கவா?   அரசியல் நாடகமா? வெளிநாட்டு சூழ்ச்சியா? பொறுத்திருந்து பார்ப்போம். 
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக