வியாழன், பிப்ரவரி 28, 2013

எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் எஸ்.டி.பி.ஐ உள்பட அனைத்து கட்சிகள் பங்கேற்ற மாபெரும் முற்றுகை போராட்டம் !!

விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கை விட்டு மாற்று வழிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கட்சிகள் சார்பில் சேலத்தில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலப்பொருளாளர் அம்ஜத் பாஷா, சேலம் மாவட்ட பொதுச் செயலாளர் சரீஃப், ஈரோடு மாவட்ட பொதுச்செயலாலர் ஹசன் அலி, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இவர்களுடன் மதிமுக,பாமக,விசிக,விவசாயிகள் சங்கம், பெரியார் திராவிட கழகம், மமக உள்ளிட்ட பல கட்சியினர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை தடுத்து நிருத்தியதால் அனைவரும் சேலம் -ஈரோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.டி.பி.ஐ மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா, விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் தற்கலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ஆனால் இத்திட்டத்தைநிரந்தரமாக கை விட்டு மாற்று வழிகளை ஏற்படுத்த வேண்டும்என்றார். 
1




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக