சனி, பிப்ரவரி 09, 2013

இஸ்லாமிக் கட்சி தலைவருக்கு ஆயுள் தண்டனை வங்காளதேச கோர்ட்டு தீர்ப்பு !

வங்காளதேசத்தில் நடந்த சுதந்திர போரின் போது மனித உரிமை மீறல் அட்டூழியத்தில் ஈடுபட்ட வழக்கில் ஜமாத்–இ–இஸ்லாமி கட்சி தலைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் அடைவதற்காக வங்காளதேசத்தில் கடந்த 1971–ம் ஆண்டில் பெரும் கிளர்ச்சி நடைபெற்றது. இந்த போரில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக படுகொலைகள், கற்பழிப்பு போன்ற
மனித உரிமை மீறல் அட்டூழியங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இந்த அட்டூழியங்களில் ஈடுபட்டவர்களை வங்காளதேச போலீசார் கைது செய்து வழக்கு போட்டுள்ளனர். தலைநகர் டாக்காவிலுள்ள சர்வதேச குற்ற டிரிபுனல் கோர்ட்டு இந்த வழக்குகளை விசாரித்து வருகிறது. கடந்த சில வாரத்துக்கு முன்பு ஒரு வழக்கில் அப்துல் கலாம் ஆசாத் என்பவருக்கு மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
இஸ்லாமி கட்சி தலைவர்
இது போன்ற ஒரு வழக்கில் ஜமாத்–இ–இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவரான அப்துல் காதர் முல்லா (வயது 65) என்பவர் கடந்த 2010–ம் ஆண்டு ஜூலை மாதம் 13–ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்த வழக்கையும் சர்வதேச குற்ற டிரிபுனல் கோர்ட்டில் ஒபைதுல் ஹசன் தலைமையில் 3 நீதிபதிகள் விசாரித்தார்கள்.
ஆயுள் தண்டனை
இதில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பு கூறினார்கள். குற்றம்சாட்டப்பட்ட அப்துல் காதர் முல்லாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.
முன்னதாக ஜெயிலில் இருந்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தீர்ப்பை கேட்க கோர்ட்டுக்கு வெளியே கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கூடினர்.
போலீசாருடன் மோதல்
தீர்ப்பு வெளியான பிறகு டாக்கா நகரின் பல்வேறு இடங்களில் போலீசாருடன், ஜமாத்–இ–இஸ்லாமி கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர். இதில் பலர் காயம் அடைந்தனர்.
இந்த தீர்ப்பு தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக அரசு தரப்பு வக்கீல் மஹ்பூப் அலாம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘இந்த குற்றச்சாட்டுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். எனவே தீர்ப்பு முழுவிவரம் கிடைத்த பிறகு அப்பீல் செய்வது குறித்து அரசாங்கத்துடன் கலந்து பேசி பின்னர் முடிவு செய்யப்படும்’ என்று கூறினார்.
2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக