வெள்ளி, பிப்ரவரி 15, 2013

லஞ்சம் தவறில்லை: ஹெலிகாப்டர் ஊழல் குறித்து இத்தாலி முன்னாள் பிரதமர் கூரியுள்ளார் !

சர்வதேச வணிகத்தில் லஞ்சம் கொடுப்பது, வாங்குவது தவிர்க்க முடியாத ஒன்று என்று இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி கூறியுள்ளார்.

                                                                                                                                              ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரம் இந்தியாவில் பூதாகரமானதற்கு அந்நாட்டு சட்டவிதிமுறைகளே காரணம் என்று கூறியுள்ள பெர்லுஸ்கோனி, இந்திய விதிகளின் படி லஞ்சம் கொடுப்பதும் பெறுவதும் தவறு என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
                                                                                                                                                    வணிகத்தில் அவசியம் ஏற்படும் தருணங்களில் லஞ்சம் அளிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என்றும், அதே சமயம் இது குற்றம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலக அளவில் இத்தாலி நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களை விசாரணை அமைப்புகள் ஆய்வு செய்யத் தொடங்கியிருப்பது பொருளாதார ரீயில் தற்கொலைக்கு ஒப்பானது என்றும் பெர்லுஸ்கோனி விமர்சித்துள்ளார்.
                                                                                                                                               ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக ஜூசெப்பே ஆர்ஸை கைது செய்திருப்பது, இத்தாலி நிறுவனங்களின் வணிகத்தை உலக அளவில் பாதிக்கும் என்று அவர் கண்டித்துள்ளார். ஒழுக்க நெறிகளை வணிகத்தில் பின்பற்றினால், உலகலாவிய வளர்ச்சியை அடைய முடியாது என்றும் பெர்லுஸ்கோனி கூறியுள்ளார்.                                                                                         தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பெர்லுஸ்கோனி அளித்திருக்கும் இந்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இவர் பிரதம்மராக இருந்த போது லஞ்சம் தலை விரித்து ஆடியது என்பது குறிப்பிடத்தக்கது ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக