புதன், பிப்ரவரி 06, 2013

சுனாமி தாக்‌‌கியது.. சாலமோன் தீவுகளில் பய‌ங்கர நிலநடுக்கம் !

தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருக்கும் சாலமோன் தீவுகளில் இன்று அ‌திகாலை பய‌ங்கர நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகளாக பதிவாகியுள்ள இ‌ந்த நிலநடு‌க்க‌த்தா‌ல் கிராம‌ங்க‌ளி‌ல் சுனா‌மி தா‌க்‌கியது. இதனா‌‌ல் ம‌க்க‌ள் பீ‌தி‌யில் உ‌ள்ளன‌ர்சொலமன் தீவுகளின் தலைநகரமான ஹொனிஹாராவிலிருந்து தென்கிழக்கான சுமார் 360 மைல்கள் தொலைவில் சுமார் 3.6 மைல்கள் ஆழத்தில் கடலுக்கு அடியில் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்ப‌ட்டு‌ள்ளது. 8 பு‌ள்‌ளிகளாக ப‌திவா‌கியு‌ள்ள இ‌ந்த நிலநடு‌க்‌க‌த்தா‌ல் ஆஸ்‌ட்ரேலியா, நியூ‌ஸிலாந்து, இந்தோனேசியா மற்றும் பிஜி தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாலமோன் தீவு கூட்டத்தின் கிழக்குப் பகுதியில் இருக்கும் கிரா கிரா தீவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக பசிபிப் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 90 செ.மீ. உயரம் கொண்ட சிறிய அளவு சுனாமி சாலமோன் தீவை தாக்கியதாகவும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூ‌றியு‌ள்ளது.
சாலமோன் தீவுகளில் இருக்கும் டெமோடோ மாகாணத்தில் லாடா எனும் இடத்தில் சுனாமி தாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சேதம் குறித்த உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.
கடந்த 2007ம் ஆண்டு, சாலமோன் தீவுகளில் 8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தாக்கிய சுனாமியால் 50 பேர் பலியாகினர். 13 கிராமங்கள் முற்றிலுமாக அழிந்து போனது குறிப்பிடத்தக்கது.
2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக