செவ்வாய், பிப்ரவரி 26, 2013

இஸ்ரேலின் சிறையில் பலஸ்தீன கைதி மரணம்!

மேற்குகரை: மீண்டும் ஒருமுறை சியோனிச கும்பலின் கொடூரத்தை இந்த உலகிற்கு தெரிவிக்கும் விதமாக ஃபலஸ்தீன் கைதி ஒருவர் இஸ்ரேலின் மகிட்டோ சிறையில் மரணித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அரபாத் ஜரதத் என்னும் 30 வயது ஃபலஸ்தீனியர் இஸ்ரேலிய சிறையில் மாரடைப்பால் மரணித்துள்ளதாக ஃபலஸ்தீன சிறைக் கைதிகளுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இன்னும் மரணத்திற்கான உண்மையான காரணத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இஸ்ரேலிய சியோனிச அரசு 4500 ஃபலஸ்தீனர்களை சட்டவிரோதமாக கைது செய்து வைத்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதில் அய்மான் ஷரவ்னெஹ், சமர் அல்- இஸ்ஸாவி, ஜாபர் மற்றும் தாரிக் காடன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் உடல் மோசமடைந்ததை தொடர்ந்து ஃபலஸ்தீனத்தில் பல இடங்களில் போராட்டம் வலுத்ததை அடுத்து அவர்களை சியோனிச அரசு கடந்த வெள்ளியன்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக