வியாழன், பிப்ரவரி 21, 2013

ஊழல் நடப்பதை தடுக்க என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை ! : பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி !!

புதுடெல்லி: ‘‘பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும், இங்கும் அங்குமாக ஏதாவது ஒரு இடத்தில் ஊழல் நடக்கத்தான் செய்கிறது. அதை தடுக்க, என்ன செய்வது என்றே தெரியவில்லை.’’ என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறினார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற ராணுவ கருத்தரங்கில் அந்தோணி பேசியதாவது: ஹெலிகாப்டர் ஊழல் போன்ற சர்ச்சைகளை தவிர்க்க, ராணுவ தளவாடங்களை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்குவதுதான் கடைசி விடையாக இருக்கும். ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படை, நேர்மையை பின்பற்றுவதில் சமரசம் என்பதே இருக்கக் கூடாது. பலவேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும், இங்கும் அங்குமாக ஏதாவது ஒரு இடத்தில் ஊழல் நடக்கத்தான் செய்கிறது. அதை தடுக்க, எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.ஆயுத தொழிற்சாலை வாரிய ஊழலில் சம்பந்தப்பட்ட 6 ஆயுத நிறுவனங்களை மத்திய அரசு உடனடியாக கருப்பு பட்டியலில் சேர்த்தது. ஆயுத வியாபாரி அபிஷேக் வர்மா சிறையில் அடைக்கப்பட்டார். இப்படி எல்லாம் செய்தாலும் கூட, மற்றவர்கள் பாடம் கற்கவில்லை. 

எனவே, நமது நடைமுறையை மேலும் கடுமையாக்க வேண்டும். குற்றச்சாட்டுகள் எழும் போதெல்லாம், உண்மையை கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும்.இவ்வாறு அந்தோணி பேசினார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக