புதன், பிப்ரவரி 13, 2013

இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற கப்பல் பாதுகாவலர்களுக்கு இத்தாலியில் சிறைவாசம்?

கேரளாவில் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 2 பேரை இத்தாலி எண்ணெய் கப்பல் என்ரிகா லெக்சீயில் பாதுகாவலர்களாக வந்த அந்த நாட்டின் கடற்படையினர் 2 பேர் சுட்டுக்கொன்றனர். இதுதொடர்பாக இத்தாலி கடற்படை வீரர்கள் மசிமிலியானோ லத்தோரே, சல்வாடோர் கிரோனே கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது தனிக்கோர்ட்டு அமைத்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது.

இவர்கள் மீனவர்கள் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டால், அதற்கான சிறைத்தண்டனையை இத்தாலியில் அனுபவிக்க அந்த நாடு நடவடிக்கை எடுத்தது. தண்டிக்கப்பட்ட கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்வது தொடர்பாக இந்தியாவுடன் இத்தாலி கடந்த டிசம்பர் மாதம் உடன்படிக்கை ஏற்படுத்தியது. இது இன்னும் 2 மாதங்களில் அமலுக்கு வர உள்ளது. 

இதுதொடர்பான ராஜ்யரீதியிலான தகவல் பரிமாற்றங்கள் நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இது அமலுக்கு வந்துவிட்டால், இத்தாலிய கடற்படை வீரர்கள் இங்கே தண்டிக்கப்பட்டாலும், தண்டனையை சொந்த நாட்டில் அனுபவிக்கலாம்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக