திங்கள், பிப்ரவரி 11, 2013

கும்பமேளா நெரிசல்: பலி எண்ணிக்கை சிக்கி 36 ஆக அதிகரிப்பு !

உத்தரபிரதேசத்தின் அலகாபாத் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதீகரித்துள்ளது. மகா கும்பமேளாவுக்காக வந்த கோடிக்கணக்கான பக்தர்கள், புனித நீராடிய பின்னர் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், அலகாபாத்தில் ஞாயிறன்று இரவு சுமார் ஒன்றரை
லட்சம் பக்தர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப குவிந்தனர்.
இதனால் அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. இதைத் தொடர்ந்து ரயில் பாதையைக் கடப்பதற்கான நடை மேம்பாலத்தில் இருக்கும் இரும்பு கைப்பிடிச் சுவர் உடைந்தது. இதனால் அங்கு நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாகவும், 30 க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகவும் முதலில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 36 ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், மீட்புப் பணிகளில் துணைபுரிவதற்கு மத்திய படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.  இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு ஒரு குழு நியமிப்பதாக மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.
3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக