சனி, பிப்ரவரி 16, 2013

நாளை மறுதினம் வீரப்பன் கூட்டாளிகளை தூக்கில் போட ஏற்பாடு !

 பால வழக்கில் சிக்கிய வீரப்பன் கூட்டாளிகளை தூக்கு மேடையில் ஏற்ற பெல்காம் சிறையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அவர்களின் குடும்பத்தினர், பொதுநல அமைப்பினர் தூக்கு தண்டனையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரபடுத்தியுள்ளனர்.மலைமாதேஸ்வரன் பகுதியிலுள்ள பாலாறு பாலத்தை வீரப்பன் கூட்டாளிகளுடன் குண்டு வைத்து தகர்த்தான். கர்நாடக போலீசார் 22 பேர் இறந்தனர். இந்த வழக்கில் கைதான நான்கு பேருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கியது. அவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தள்ளுபடி செய்தார்.அவர்களுக்கான தூக்கு தண்டனையை நிறைவேற்றும் பணிகள் தீவிரமாகி  உள்ளன. குடும்பத்துக்கு தகவல் அனுப்பப் பட்டுள்ளது.                                                                                                                                                                                                                                                                                                      தூக்கு மேடையை தயார்படுத்தும் பணியில் சிறை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக அவர்கள் தனிமை சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். தண்டனை நிறைவேற்றப்படும் வரை அவர்கள் தினமும் காலை, மாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அவர்கள் விரும்பும் உணவு வழங்கப்படும். திங்கட்கிழமை தண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இந்நிலையில், அவர் களை தூக்கில் இருந்து காப்பாற்ற குடும்பத்தினர் முயற்சி எடுத்து வருகின்றனர். தமிழக கட்சி தலைவர்களிடம் முறையிடவும், உச்ச நீதிமன்றத்தில் மறுபரிசீலனை மனு தாக்கல் செய்வது குறித்தும் அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.   3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக