புதுடெல்லி:கடுமையான எதிர்ப்புகளுக்கும், கைத்தட்டல்களுக்கும் மத்தியில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி டெல்லி ஸ்ரீராம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆற்றிய உரை அபத்தங்கள் நிறைந்திருந்தது. தனது ஆட்சி தான் குஜராத்தின் முழுமையான வளர்ச்சிக்கு காரணம் என்பதை மோடி தனது உரையில் பொய்யான தகவல்களை வெளியிட்டார். தனது ஆட்சி காலத்தில் குஜராத்தில் துவக்கிய பல்வேறு நிறுவனங்களை குறிப்பிடும் பொழுது இவை இந்தியாவிலேயே முதலாவதாக துவக்கப்பட்டதாக மோடி கூறியது அப்பட்டமான பொய்யாகும். அதனை விட குஜராத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளாக இயங்கி வந்த
பல்வேறு பழைய நிறுவனங்களின் புதிய பதிப்புகளை கூட இந்தியாவிலேயே முதலாவதாக துவக்கப்பட்டது என்று கூற மோடி தயங்கவில்லை.
காந்திநகரில் 2008-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட ஃபாரன்சிக் சயன்ஸ் யூனிவர்சிடியை உலகின் முதல் பல்கலைக்கழகம்(ஃபாரன்சிக்) என்று மோடி மாணவர்களை முட்டாள்களாக கருதி கூறினார். ஆனால், உலகில் இதைப்போல நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே இதைப்போல டெல்லியில் 1972-ஆம் ஆண்டு முதல் இன்ஸ்ட்யூட் ஆஃப் க்ரிமினலாஜி என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
2008-ஆம் ஆண்டு குஜராத்தில் துவக்கப்பட்ட ராஷ்ட்ர சக்தி யூனிவர்சிடியையும்(ஆர்.எஸ்.யு) உலகின் முதல் பல்கலைக்கழகம் என்று மோடி கூறினார். ஆனால், ஹைதராபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் நேசனல் போலீஸ் அகாடமி 1948-ஆம் ஆண்டு இயங்கி வருகிறது. இது தவிர மேகாலாயாவில் நார்த் ஈஸ்டன் போலீஸ் அகாடமி 1978-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இயங்கும் போலீஸ் அகாடமிகள் வழங்கும் ஆரம்பக்கட்ட பயிற்சியை மட்டுமே வழங்கும் குஜராத்தின் ஆர்.எஸ்.யுவை ஹைதராபாத் மற்றும் மேகாலாயவில் இயங்கும் நிறுவனங்களுடன் ஒப்பிட கூட முடியாது என்று நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் காந்திநகரில் துவக்கப்பட்ட இந்தியன் இன்ஸ்ட்யூட் ஆஃப் டீச்சர் எஜுகேசனை(ஐ.ஐ.டி.இ) நான்கு ஆண்டு எம்.எட் கோர்ஸ் நடத்தும் ஒரே நிறுவனம் என்று மோடி கூறியது அவையில் இருந்தோருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. என்.சி.ஆர்.டியின் கீழ் இதைப்போல ஏராளமான நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருகின்றன.
இவ்வாறு அபத்தங்களையும், பொய்களையும் கூறி மாணவர்களை முட்டாளாக்க கருதிய மோடியைத்தான் சில ஊடகங்களும், சங்க்பரிவார்களும் அடுத்த பிரதமர் வேட்பாளராக அறிவிக்க போட்டியிடுகின்றன.
அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைப்பிடிப்பானாம் – இது ஒரு பழமொழி இது மோடிக்கு கனகச்சிதமாக பொருந்தும்.அத்தகையதொரு முட்டாள்தனத்தை இந்திய மக்கள் செய்யமாட்டார்கள் என கருதுவோம்.
2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக