வியாழன், பிப்ரவரி 21, 2013

! சுஷில் குமார் ஷிண்டே பேச்சு காற்றில் போச்சு !

காவித் தீவிரவாதம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே தனது கருத்தினை                                                                                                                                                                     திரும்பப் பெற்று வருத்தம் தெரிவித்தால் தான் பாராளுமன்றக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைப்போம் என்று பாரதீய ஜனதா நிபந்தனை விதித்தது. இதையடுத்து ஷிண்டே தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.

இதையடுத்து பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஷிண்டே மன்னிப்பு கேட்டதை வரவேற்கிறோம். பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதா எந்த இடையூறும் செய்யாது, என்றார். ஆனால் பா.ஜனதாவின் வழிகாட்டி அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இந்த சமாதானத்தை ஏற்கவில்லை.

இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் கூறுகையில், ‘ஜெய்ப்பூர் மாநாட்டில் ஷிண்டே பேசியது அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஷிண்டே வருத்தம் தெரிவித்ததில் எங்களுக்கு திருப்தி இல்லை. விரைவில் நேரடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.  3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக