புதுடெல்லி:பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு கூட்டு இந்துத்துவா மனசாட்சியின் படி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி கஷ்மீர் இளைஞர் அப்சல் குருவை இன்று அதிகாலை 5.25 மணியளவில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தூக்கிலிட்டு
படுகொலைச் செய்துள்ளது.
அப்சலின் பிறந்த நாடான கஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி பாராளுமன்ற தாக்குதலில் சதியாலோசனை நடத்தியதாக குற்றம் சாட்டி 2002 டிசம்பர் 18-ஆம் தேதி அப்சல் குருவிற்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. இது 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி உயர்நீதிமன்றமும், 2005 ஆகஸ்ட் நான்காம் தேதி உச்சநீதிமன்றமும் உறுதிச் செய்தது. 2006 அக்டோபர் 20-ஆம் தேதி திஹார் சிறையில் மரணத்தண்டனையை அமல்படுத்த உத்தரவிடப்பட்டது.
குடியரசு தலைவருக்கு அளிக்கப்பட்ட கருணை மனு 2 வாரத்திற்கு முன்பு தள்ளுபடிச் செய்யப்பட்டது. ஒரு அப்பாவியின் உயிரை காவு வாங்கிய இந்திய அரசு, மனித உரிமையை உச்சக்கட்டமாக மீறியுள்ளது.
2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக