வியாழன், பிப்ரவரி 14, 2013

அப்ஸல் குருவின் அடக்கஸ்தலத்தை பார்வையிட குடும்பத்தினருக்கு அனுமதி !!

கூட்டு மனசாட்சி என்ற நீதியை குழித்தோண்டி புதைக்கும் தீர்ப்பால் அநியாயமாக தூக்கிலிடப்பட்ட அப்பாவி கஷ்மீர் இளைஞர் அப்ஸல் குருவின் அடக்கஸ்தலத்தை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நெருங்கிய உறவினர்கள் சிறைக்கு வந்து பிரார்த்தனை புரியலாம் என்று மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்ஸல் குரு உபயோகித்த பொருட்கள் குடும்பத்தினரிடம் வழங்கப்படும். சிறைக்கு வரும் தேதியை அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் என்று ஆர்.கே.சிங் மேலும் தெரிவித்தார்.
அதேவேளையில், அப்ஸல் குருவின் உடலை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதை தவிர வேறு எந்த கோரிக்கையும் தங்களுக்கு இல்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அப்ஸல் குருவின் உடலை கஷ்மீரில் ஸோபூர் கிராமத்தில் அடக்கம் செய்ய ஒப்படைக்கவேண்டும் என்று கோரி திஹார் சிறை அதிகாரிகளுக்கும், பாராமுல்லா துணை கமிஷனருக்கும் கடிதம் எழுதியதாக அப்ஸலின் உறவினர் முஹம்மது யாஸீன் தெரிவித்துள்ளார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக