வியாழன், பிப்ரவரி 28, 2013

! உண்ணாவிரதம் இருக்கும் காந்தியவாதி சசிபெருமாள் உடல்நிலை பாதிப்பு !

சேலத்தை  சேர்ந்த  காந்தியவாதி  சசிபெருமாள்.  58 வயதான இவர் தமிழ்நாட்டில்   பூரண மதுவிலக்கை  அமுல்படுத்த கோரி  காந்தி நினைவு தினமான ஜனவரி  30-ந்தேதி சென்னை  கடற்கரை காந்தி  சிலை முன்பு சாகும்வரை  உண்ணாவிரதத்தை  தொடங்கினார்.


போலீசார் அவரை கைது செய்து புழல்  சிறையில் அடைத்தனர்.  அங்கும் உண்ணாவிரதத்தை  தொடர்ந்தார். ராயப்பேட்டை  அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கும் உண்ணாவிரதத்தை  கைவிட மறுத்து விட்டார்.

இதையடுத்து சென்னை  பொது மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட சசிபெருமாள் அங்கும்  உண்ணாவிரதத்தை தொடர்ந்ததால்  அவரை போலீசார் விடுவித்தனர்.  இதையடுத்து மயிலாப்பூரில்  உள்ள நெல்லை ஜெபமணி வீட்டு வளாகத்தில்   உண்ணாவிரதத்தை  தொடர்ந்தார்.

இன்று 30-வது நாளாக உண்ணாவிரதத்தை  தொடரும் சசிபெருமாளின் உடல்நிலை மோசம்  அடைந்து உள்ளது. டாக்டர்கள்  அவரை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படியும்,   இல்லை என்றால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்  என்றும்   அறிவுறுத்தினார்கள்.

அதனை கேட்க மறுத்த  சசிபெருமாள் மதுவினால் ஏளாமான  ஏழை மக்கள் உயிர் இழக்கிறார்கள்.  எனது ஒரு உயிர்  போவதைப்பற்றி நான் கவலைப்படவில்லை  என்று பதில் அளித்தார்.

உண்ணாவிரதத்தை  கைவிடும்படி   அரசியல் கட்சி தலைவர்கள் சசிபெருமாளை கேட்டுக்கொண்டனர்.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக