வெள்ளி, பிப்ரவரி 01, 2013

விஸ்வரூபத்தில் 30 நிமிட காட்சிகளையாவது வெட்டி எறிய வேண்டும்!' - இஸ்லாமிய கூட்டமைப்பு உறுதி !

சென்னை: விஸ்வரூபம் படத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட காட்சிகளை வெட்டினால்தான் இணக்கமான முடிவை எட்ட முடியும் என்று இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் வற்புறுத்தியுள்ளனர். அவர்கள் சொல்வதுபோல வெட்டினால் 30 நிமிட காட்சிகளை தூக்கி எறிய வேண்டியிருக்கும். படத்ததில் ஆப்கன் குழந்தைகள் கைகளை துப்பாக்கியைப் பயன்படுத்துவது போல பாவித்து விளையாடுவது, மனித வெடிகுண்டு கடைசியாக தொழுவது, குரான் ஒலிப்பது, முல்லா உமர்  வசனங்கள் போன்றவற்றை முழுமையாகவே நீக்குமாறு கூறியுள்ளனர் இஸ்லாமிய தலைவர்கள். 

இதுபோல் முஸ்லிம்கள் தொழுகை செய்வதிலும் சில முரண்பட்ட காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றையும் நீக்கச் சொல்கிறார்கள். கமல் சார்பில் அவரது அண்ணன் பேசினாலும், காட்சிகளை வெட்டுவதில் இறுதி முடிவெடுக்க கமல் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறாராம். 

அப்படியென்றால் இந்த பேச்சுவார்த்தையில் அர்த்தம் இல்லையே. அவரை முதலில் வரச்சொல்லுங்கள். பிரச்சினையை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குத்தான் இருக்க வேண்டுமே தவிர எங்களுக்கல்ல, என்று தெரிவித்துள்ளனர் இஸ்லாமிய அமைப்பினரும், இந்த பேச்சுவார்த்தையை ஒருங்கிணைக்கும் அதிகாரிகளும். இரு தரப்பினருக்கும் சுமூக உடன்பாடு ஏற்பட்டால் ஒரிரு நாட்களில் படம் வெளியாக வாய்ப்புள்ளது
2


1 கருத்து:

  1. vishbaroobam padathai en muslimkal intha alavirku ethirkirargal puriyavillai,oru padathirku ivvalavu pirachinai,ithellam arasiyalthan

    பதிலளிநீக்கு