வியாழன், பிப்ரவரி 14, 2013

அப்சல் குரு தூக்கு விவகாரம்: மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் வழக்கில் மத்திய அரசு 4 வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தூக்கு தண்டனை கைதியின் கருணை மனு நிராகரிக்கப்படுவதை மக்களுக்கு அறிவித்த  பின்னரே, தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி, கைதிகள் உரிமைகள்  அமைப்பின் இயக்குனர் பி.புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று பொது நலன்  மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

அதில், "நாடாளுமன்றத்தில் நடத்திய தாக்குதல் தொடர்பான வழக்கில் அப்சல் குருவுக்கு  9 ஆம் தேதி காலை 8 மணிக்கு தூக்கு தண்டனை உத்தரவு நிறைவேற்றப்பட்டது. அப்சல்  குரு தாக்கல் செய்திருந்த கருணை மனு, ஜனாதிபதியால் 4 ஆம் தேதி நிராகரிக்கப்பட்ட  நிலையில், 5 நாட்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்பட்டது. கைதிக்கு உரிமை திரிவேணி பென் மற்றும் குஜராத் அரசுக்கு இடையே நடந்த வழக்கில்  உச்ச நீதிமன்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதில், தூக்கு தண்டனையை  நிறைவேற்ற காலதாமதம் ஆகும்பட்சத்தில், அந்த தண்டனையை நிறைவேற்றுவதை  எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு கைதிக்கு உரிமை உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.


அப்சல்குருவின் கருணை மனு நிராகரிப்பு மற்றும் அவருக்கு தூக்கு தண்டனை  நிறைவேற்றும் காலம் ஆகியவை,அரசியல் சாசனம் 21 ஆவது பிரிவில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ள உரிமைகளை மீறியுள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும்.  அப்சல் குரு கருணை மனு தாக்கல் செய்த நிலையில், 20 கைதிகள்  காத்துக்கொண்டிருக்கின்றனர். அப்சல்குருவுக்கு நடந்ததுபோல், கருணை மனு  நிராகரிக்கப்பட்டு, அதை ரகசியமாக வைத்து, தூக்கு தண்டனையை நிறைவேற்றி விடுவார்களோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. 

ரகசியமாக இந்த தண்டனையை நிறைவேற்றுவது, ஜனநாயகத்தை சாகடிக்கும்  செயலாகத்தான் கருதப்படும். ஒருவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டதும், அதை  பொதுமக்களுக்கு தெரிவிக்காமல் விட்டுவிட்டால், அந்த கைதியால் சட்ட உதவிகளை  பெற முடியாத நிலை ஏற்படும். அதோடு, அவருக்கு சட்ட உதவிகளை செய்யும்  கடமையையும் வழக்கறிஞர்கள் ஆற்ற முடியாமல் போய்விடும். 

இது கைதிகளின் உரிமையை மறுப்பது மட்டுமல்ல,வழக்கறிஞர்களின் கடமையை  தடுப்பதாகிவிடும்.மக்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவே தூக்கு தண்டனை கைதி  ஒருவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டால், அதை மக்களுக்கு அறிவிக்காமல்,
தூக்கு தண்டனையை நிறைவேற்ற மத்திய அரசுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று  கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு  வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் 4 வார காலத்திற்குள்  பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.                                                           1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக