புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் அமைந்துள்ள புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை பல்நோக்கு அரசு மருத்துவமனையாக மாற்றப் போவதாக தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், அனைத்து வழக்ககளிலும் அரசுக்குச் சாதகமாகவே தீர்ப்புகள் வந்தன.
இந்த நிலையில் வழக்கறிஞர் வீரமணி என்பவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக சுற்றுச் சூழல் துறை சார்பில், வழங்கப்பட்டிருந்த தடையில்லாச் சான்றிதழ் பல்நோக்கு மருத்துவமனைக்கு செல்லாது. எனவே அரசின் முடிவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணைகள் அனைத்தும் முடிந்து இன்று தீர்ப்பு வெளியிடப்பட்டது. தீர்ப்பை வெளியிட்ட நீதிபதி, அரசின் முடிவுப்படி புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றத் தடையில்லை என்று தீர்ப்பளித்தார்.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக