புதன், பிப்ரவரி 27, 2013

! ஒபாமா மனைவி ஆடையை மாற்றம் செய்து ஒளிபரப்பபு !

ஆஸ்கர் விருது அறிவிக்கும் போது,  அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் அணிந்திருந்த  உடையை கிராபிக்சில்  மாற்றி டிவியில் ஒளிபரப்பியது ஈரான்.
திரைப்படங்களுக்கான  ஆஸ்கர்  விருது  வழங்கும்  நிகழ்ச்சி  அமெரிக்காவின் லாஸ்  ஏஞ்சல்ஸ்  நகரில்  நேற்று  காலை  நடந்தது.  சிறந்த படத்துக்கான விருதை 'அர்கோ'  படம் தட்டி சென்றது. கடந்த 1979ம்  ஆண்டு  ஈரானில் ஏற்பட்ட மக்கள் புரட்சியின் போது,  அமெரிக்க தூதரகத்தில் இருந்தவர்களை சிறைபிடித்தனர்.

 அவர்களில் 6 பேர்  தப்பி சென்று கனடா தூதரகத்தில்  தஞ்சம் அடைகின்றனர். அவர்களை  அமெரிக்க உளவு  நிறுவனம்  சிஐஏவின்  அதிகாரிகள் மீட்டு செல்கின்றனர்.  இதுதான் கதை.  இந்த படத்துக்கு  ஈரானில் தடை விதிக்கப்பட்டது.  இதுதான் சிறந்த படமாக  தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த படத்துக்கான விருதை வழங்கிய, மிச்சேல்,  கை இல்லாத ஆடையை அணிந்திருந்தார்.

ஆஸ்கார் விருது வழங்கும் விழா நிகழ்ச்சிகளை ஈரான், "டிவி'க்களும் ஒளிபரப்பின.


இஸ்லாமிய நாடான ஈரானில்,  பெண்கள் கவர்ச்சி ஆடை அணிய அனுமதியில்லை. இதே போல,  "டிவி'க்களிலும் கவர்ச்சி  ஆடை அணியும் பெண்களை பார்க்க முடியாது.  ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மிச்சேல் அணிந்து வந்த கவர்ச்சி ஆடையை, ஈரான், "டிவி' கிராபிக்ஸ் மூலம், கவர்ச்சி இல்லாத  ஆடையாக மாற்றி ஒளிபரப்பியது. இந்த மாதிரியான ஊடகங்கள் உலகம் முழுவது  இருந்தால்  உலகம் சிறப்பாக இருக்கும் எனபது குறிப்பிடத்தக்கது.
3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக