புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கோரி சங்க்பரிவார தீவிரவாத அமைப்புகள் பா.ஜ.கவுக்கு நெருக்குதல் அளித்து வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தலைவர்கள் கடந்த வாரம் சந்தித்து பேசிய நிலையில், பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட வேண்டும் என்று, வி.ஹெச்.பி ஹிந்து பயங்கரவாத அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் ஞாயிற்றுக்கிழமை வெளிப்படையாகவே வலியுறுத்தினார்
.
பிரதமர் வேட்பாளராக மோடி நிறுத்தப்பட வேண்டும் என்று மக்களே கோரிக்கை விடுத்து வருவதால், அதுபற்றி பாரதிய ஜனதா கட்டாயம் பரிசீலிக்க வேண்டும் தற்போதைக்கு மோடியே எங்களின் தலைவர் என்று பாஜகவின் தலைவர் ராஜ்நாத் சிங்கே ஒப்புக்கொண்டுள்ளார். அப்படி இருக்கையில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் தயக்கம் ஏன்? என்று அசோக் சிங்கால் கேள்வி எழுப்பினார்.
வி.ஹெச்.பி., மற்றும் சங் பரிவாருக்கு நெருக்கமான சில ஹிந்து தீவிரவாத அமைப்புகள், கும்பமேளாவில், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடக்கும் மாநாட்டில் சந்தித்துப்பேசி, நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, பாஜகவை வற்புறுத்த உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ராஜ்நாத் சிங்கும் புதன்கிழமை அலாகாபாத் செல்ல இருப்பது, இந்த யூகத்தை வலுவடையச் செய்திருக்கிறது. ஐக்கிய ஜனதாதளத்தின் எதிர்ப்பால் நரேந்திர மோடி விஷயத்தில் அடக்கி வாசிக்கும் பாஜவுக்கு, இப்போது சங்பரிவாரிடம் இருந்து நெருக்குதல்கள் வரத் தொடங்கியுள்ளன.
2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக