வட ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்ட புரட்சியை அடுத்து பக்கத்து நாடான சிரியாவிலும் மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த நாட்டு அதிபரை வீழ்த்திவிட்டு ஆட்சி அமைக்க அவர்கள் 2 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார்கள். பொதுமக்களுக்கு ஆதரவாக புரட்சிபடை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பல்வேறு நாடுகள் ஆயுத உதவி செய்து வருகின்றதாகவும் செய்திகள் செளியகின்றன. அவர்கள் அரசு படையை எதிர்த்து போராடி
வருகிறார்கள்.
சிரியாவின் பலநகரங்கள் தற்போது புரட்சிபடையின் பிடியில் உள்ளன. அவர்கள் தலைநகரம் டமாஸ்கசை பிடிப்பதற்காக முன்னேறி வருகிறார்கள். தலைநகரை ஒட்டி உள்ள ஜோபார் மாவட்டத்தை அவர்கள் கைப்பற்றி கொண்டனர்.
டமாஸ்கஸ் அருகே உள்ள பார்மிரா நகரையும் தங்கள் பிடியில் கொண்டுவந்துள்ளனர். அங்கிருந்து தலைநகரம் டமாஸ்கசின் கிழக்கு பகுதிக்குள் புரட்சிபடைகள் புகுந் துள்ளன. அங்கு அரசு படைகளுக்கும், புரட்சிபடைகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. சரமாரியாக பீரங்கி தாக்குதலும் நடக்கின்றன. இந்த தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகயிருப்பதாக தெரியவந்துள்ளது.
பார்மிரா நகரில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அதில் 19 பேர் பலியானார்கள்.
புரட்சிபடையினர் தலைநகருக்கு புகுந்திருப்பதால் அவர்கள் முற்றிலும் நகரை கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக