புதுடில்லி: அப்சல் குரு தூக்கிலிடப்படுவது குறித்த தகவலை அவரது
குடும்பத்திற்கு முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும்.தாமதப்படுத்தியது
ஏன் ?
என உள்துறை அமைச்சகத்தின் மீது கேள்வி எழுப்பி உள்ளார் பிரதமர்
மன்மோகன்சிங். 2001-ம் ஆண்டு பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் காஷ்மீரைச்
சேர்ந்த அப்சல்குரு(43) கடந்த 9-ம் தேதியன்று காலை 8 மணியளவில் டில்லி
திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டார். இந்த விவகாரம் பெரிதும்
விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. இது தொடர்பான தகவலை 8-ம் தேதி
(வெள்ளியன்று) விரைவுத் தபால் வாயிலாக அவரின் குடும்பத்தினருக்கு
தெரிவித்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதனை
அப்சல்குருவின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.அப்சல் குரு
தூக்கிலிடப்பட்டதற்கு காஷ்மீர் மாநிலமுதல்வர் ஒமர் அப்துல்லா பல்வேறு
கேள்விகளை எழுப்பியுள்ளார். இதற்கிடையே அப்சல்குருவிற்காக வாதாடிய வக்கீல்
விலகிவிட்டார். ஷிண்டே மீது பிரதமர் அதிருப்தி
இந்நிலையில் டில்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த கவர்னர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன்சிங், அப்சல்குரு விவகாரம் தொடர்பாக அதிருப்தி வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.இது குறித்து அவர் கூறுகையி்ல், பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் அப்சல் குரு தூக்கிலிடப்படும் தகவலை மத்திய உள்துறை அமைச்சகம், அவரின் குடும்பத்தினருக்கு முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். தாமதப்படுத்தியது சரியல்ல. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்னையில் , தண்டனை நிறைவேற்றப்பட்ட 51 மணி நேரத்தி்ற்கு பின்னர் ஊடகங்கள் வாயிலாக தான் அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தில் தண்டனை நிறைவேற்ற முடிவு எடுத்திருப்பது குறித்த தகவலினை அவர்களின் கவனத்திற்கு முன்கூட்டியே கொண்டு சென்றிருக்கலாம். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சி்ங் உள்துறை அமைச்சர் சுஷி்ல்குமார் ஷிண்டே மீது தனது அதிருப்தி வெளியிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக