சனி, பிப்ரவரி 23, 2013

நெல்லையை தலைமையாய் கொண்டு ரயில்வே கோட்டம் உருவாக வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ ரயில் மறியல் போராட்டம் ! (படங்கள் இணைப்பு)

தமிழகத்தை தொடர்ந்து ரயில்வேயில் புறக்கணிக்கும் மத்திய அரசை கண்டித்தும் மற்றும் நெல்லையை தலைமையாய் கொண்டு ரயில்வே கோட்டம் உருவாக வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ ரயில் மறியல் போராட்டம்.

ரயில்வே திட்டங்களில் தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிப்பதை கண்டித்து எஸ்டிபிஐ சார்பில் நேற்று (22.02.2012) மாலை 4 மணிக்கு நெல்லை யில் ரயில் மறியல் போராட்டம் மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா அவர்களின் தலைமையில் தடையை மீறி நடைபெற்றது, இதில் கண்டன உரை ஆற்றிய மாநில செயலாளர் இப்ராகிம் அவர்கள் மத்திய அரசு ரயில்வே திட்டங்களில் தொடர்ந்து தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகிறது.இதனால் அண்டை மாநிலமான கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் மின்மயமாக்கல், இரட்டை வழித்தட பணிகளை கட்சி பேதமின்றி வலியுறுத்தி பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் நெல்லை ரயில் நிலைய குறைகளை திருவனந்தபுரம் மற்றும் மதுரை சென்று முறையிட வேண்டிய நிலை உள்ளது. மேலும் தனது கண்டன உரையில் நெல்லையை தலைமையிடமாக கொண்டு தனிக்கோட்டம் அமைக்க வேண்டும். ஏன் என்றால் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் எர்ணாகுளத்தில் துவங்கி நெல்லை மாவட்டம் செங்குளம் வரை உள்ளது. 

திருவனந்தபுரம் கோட்டத்தை சேர்ந்த கேரளாவில் உள்ள ரயில் நிலையங்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் உள்ளது. குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களுக்கு எந்த வசதியும் செய்து தரப்படுவதில்லை. இந்த இரு மாவட்டங்களிலும் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்தும் அதன் வளர்ச்சிப் பணிகளில் உத்வேகம் காட்டப்படவில்லை பல ரயில் நிலையங்கள் அதிக தூரத்திலும், பேருந்து வசதிகள் இல்லாத ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களிலும் அமைந்திருக்கின்றன. ஆனால், கேரளத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் நகரத்தின் முக்கிய பகுதிகளில் அமைந்துள்ளது கேரளத்தில் அமையப்பெற்றுள்ள ரயில் பாதைகளில் பெரும்பாலானவை இருவழித் தடங்களாக மாற்றப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள ஒருசில பாதைகளும் தற்போது இருவழித்தடமாக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழக பகுதிகளான திருவனந்தபுரம்- கன்னியாகுமரி (87 கி.மீ.), நாகர்கோவில்- மதுரை (230 கி.மீ) வழித்தடங்களை இருவழிப் பாதைகளாக மாற்றுவதற்கு மிகவும் தாமதம் ஏற்பட்டு வருகிறது இரட்டை ரயில்பாதை, மின்மயம் ஆக்குதல், விரிவாக்கம் செய்தல், கூடுதல் ரயில்கள், அதிக நிதி ஒதுக்கீடு போன்றவை ரயில்வே கோட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சீராக இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறில்லாமல் திருவனந்தபுரம் கோட்டத்திலுள்ள தமிழகப் பகுதிகளுக்கு பாரபட்சம் காட்டுவது நீண்டகாலமாகவே இருக்கிறது.

மேலும் தெற்கு ரயில்வே (Railway Zone) எப்ரல் 14 1951-ம் ஆண்டு மூன்று மாநில ரயில்வேகளை இணைத்து உருவாக்கபட்டது. தற்போது தெற்கு ரயில்வேயில் ஆறு கோட்டங்கள் உள்ளன. சென்னை, திருச்சி, சேலம், பாலக்காடு, மதுரை, திருவனந்தபுரம் ஆகியன ஆகும். தெற்கு ரயில்வேக்கு தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ரயில்வழி தடங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் 3885கி.மீ தூரமும், கேரளாவில் 1050கி.மீ தூரமும், ஆந்திராவில் 121 கி.மீ தூரமும், கர்நாடகாவில் 37கி.மீ தூரமும் புதுச்சேரியில் 11கி.மீ தூரம் என தற்போது 5104 கி.மீ ரயில் வழி தடங்கள் உள்ளது.

சென்னை கோட்டத்தில் 830கி.மீ, சேலம் கோட்டத்தில் 780கி.மீ, பாலக்காடு கோட்டத்தில் 575கி.மீ, திருவனந்தபுரம் கோட்டத்தில் 624.7 கி.மீ, திருச்சி கோட்டத்தில் 993கி.மீ, மதுரை கோட்டத்தில் 1301 கி.மீ தூரம் ரயில் வழி தடம் உள்ளது. 

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் 624.7 கி.மீ. தொலைவுக்கு வழித்தடங்கள் உள்ளன. இதில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் கன்னியாகுமரி- திருவனந்தபுரம் வழித்தடம் 87 கி.மீ., நாகர்கோவில்- திருநெல்வேலி வழித்தடம் 74 கி.மீ. என்று மொத்தம் 161 கி.மீ. தொலைவு உள்ளது. திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழுள்ள 25 சதவீத வழித்தடங்கள் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் வருகிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி- திருவனந்தபுரம் ரயில்பாதை 16.4.1979 அன்றும், நாகர்கோவில்- திருநெல்வேலி ரயில் பாதை 8.4.1981 அன்றும் பயன்பாட்டுக்கு வந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் தடங்கள் அமைக்கப்பட்டு சில மாதங்கள் வரை அவை மதுரை கோட்டத்துடனேயே இருந்தன. நாகர்கோவில்- திருநெல்வேலி மார்க்கத்தில் ரயில் தடம் பயன்பாட்டுக்கு வராததால் நிர்வாக வசதிக்காக திருவனந்தபுரம் கோட்டத்துடன் பின்னர் இணைக்கப்பட்டது. இணைக்கப்படும்போது நாகர்கோவில்- திருநெல்வேலி ரயில் பாதை பயன்பாட்டுக்கு வந்ததும் மதுரை கோட்டத்துடன் இணைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை

கடந்த பல ஆண்டுகளாகவே திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின்கீழ் வரும் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பகுதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளனமேலும் .புதிய திட்டங்கள், புதிய ரயில்கள், ரயில்நிலைய விரிவாக்கம் போன்ற வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வந்தால் ஒரு சிலஅதிகாரிகளால் திட்டங்கள் முடக்கப்படுகிறது , இல்லையென்றால் திட்ட நிதியை அல்லது திட்டத்தையே கேரளாவுக்கு மாற்றி விடுவார்கள்.

குமரி மற்றும் நெல்லை மாவட்ட அரசியல் கட்சிகளும் சட்டமன்ற மற்றம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.இதனால் .இதற்காக கேரளாவின் திருவனந்தபுரம் மற்றும் மதுரை ரெயில்வே கோட்டங்களில் இருக்கும் ரெயில்வே பாதைகளை பரஸ்பரம் பிரித்து நெல்லையை தலைமையாகக் கொண்டு புதிய ரெயில்வே கோட்டம் பாலக்காடு கோட்டத்திலிருந்து தமிழகப் பகுதிகளைப் பிரித்து சேலம் கோட்டத்தை உருவாக்கினது போல போல திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வரும் நெல்லை மற்றும் கன்னியாகுமரிப்பகுதிகளைப் பிரித்து புதிதாக நெல்லையில் ஒரு ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும்அமைக்கப்பட வேண்டும் நெல்லை கோட்டம் உருவாக்கப்பட்டால் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் வரிசையில் தமிழகத்தின் 5வது கோட்டமாக .நெல்லை ரெயில்வே கோட்டம் உருவாகும் இதனால் தென் தமிழகம் மிகவும் வளர்ச்சி பெரும் என்று தனது உரையில் கூறினார் இந்த ரயில் மறியல் போராட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் வீர சிந்தா,மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி மற்றும் நசீர் கான் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் உஸ்மான் கான் ,நெல்லை தொகுதி தலைவர் சாகுல்,பாளை தொகுதி தலைவர் அப்துல் உள்பட மாவட்ட,நகர நிர்வாகிகள் உள்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டனர்.
1



























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக