செவ்வாய், பிப்ரவரி 19, 2013

அப்சல் குருவின் உடலை குடும்பத்தாரிடம் அரசு ஒப்படைக்குமா?


டெல்லி : பாராளுமன்றத் தாக்குதலில் குற்றம் சாட்டப் பட்ட அப்சல் குருவ்க்கு பிப்ரவரி 9 அன்று இரகசியமாக மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது. 


அப்சல் குருவின் உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவரது மனைவி ஜம்மு காஷ்மீர் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். அவரது கோரிக்கையை மாநில அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் '' அப்சல் குரு உடலை ஒப்படைப்பதா? வேண்டாமா? என்பது குறித்து இறுதி முடிவு விரைவில் எடுக்கப் பட்டு ஜம்மு காஷ்மீர் மாநில அரசுக்கு தெரிவிக்கப் படும்'' என்று தெரிவித்தார்.

மேலும் அப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என்றே கூறப் படுகிறது.            1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக