புதன், பிப்ரவரி 06, 2013

விண்வெளிக்கு செல்ல தயாராக இருக்கிறேன்: ஈரான் ஜனாதிபதி !!

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக உலக நாடுகள் குற்றம் சுமத்தி அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம் குரங்கை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான். விண்வெளிக்கு அனுப்பப்பட்ட குரங்கு உயிருடன் திரும்பியதன் மூலம் தங்களது விண்வெளி திட்டம் வெற்றி பெற்று விட்டதாக ஈரான் ஜனாதிபதி அகமதி நிஜாத் கூறியுள்ளார். ஆனால்  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்  ராக்கெட் சோதனை என்ற போர்வையில் ஈரான் ஏவுகணை தயாரிக்கலாம் என்று சந்தேகிக்கின்றன.

இதற்கிடையே ஈரான் ஜனாதிபதி அகமதி நிஜாத் குறிப்பிடுகையில், நம்நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளின் உழைப்பினால் விண்வெளி திட்டத்தில் வெற்றி கண்டு வருகிறோம் என்றார். விண்வெளிக்கு குரங்கு அனுப்பப்பட்டதை மேற்கத்திய நாடுகள் நம்ப மறுக்கின்றன என்றும் ஈரான் விண்கலம் மூலம், விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்பட்டால் முதல் ஆளாக நான் செல்ல தயாராக இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.     1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக