வியாழன், நவம்பர் 01, 2012

டெல்லி அக்பராபாதி மஸ்ஜிதை இடிக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை !

புதுடெல்லி:டெல்லி செங்கோட்டைக்கு  அருகில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க அக்பராபாதி மஸ்ஜிதை  இடிக்கும், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.டெல்லி செங்கோட்டை அருகே முகலாயகர்கள் காலத்தில் கட்டப்பட்டு, வெள்ளையர்களால் இடிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட அக்பராபாதி மஸ்ஜிதை தரைமட்டமாக்க கடந்த ஜூலை 30 அன்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
வெள்ளிக்கிழமை ஜும்மா உள்ளிட்ட 5 வேளை தொழுகைகளையும் நடந்து வந்த வரலாற்று சிறப்பு மிக்க அக்பராபாதி மஸ்ஜிதை இடிப்பது, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயலாக அமைந்துவிடும், எனக்கூறி டெல்லி காவல்துறை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. இதனை விசாரித்த நீதிபதி, டெல்லி காவல்துறை தரப்பில் தொடரப்பட்ட முறையீட்டு வழக்கை அக்.19 அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.மேலும் மஸ்ஜிதை இடிப்பது தொடர்பாக தாங்கள் வழங்கிய தீர்ப்பை 15 நாட்களுக்குள் அமல்படுத்த(இடிக்க) வேண்டும் என்று உத்தரவிட்டார்.  இடித்த பிறகு, ’முகலாயர்’ காலத்தில் அந்த இடத்தில் மஸ்ஜித் கட்டப்பட்டது உண்மையா என்பதை ஆய்வு செய்து, தொல்லியல் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும், என்றும் உத்தரவிட்டார்.உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக அப்பகுதி முஸ்லிம்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்த்மாஸ் கபீர் மற்றும் நீதிபதிகள் சுரேந்தர் சிங்,  செலமேஷ்வர் ஆகியோர் கொண்ட அமர்வு, அக்பராபாதி மஸ்ஜிதை இடிக்கும் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு (இன்று) வியாழக்கிழமை வரை தடை விதித்தனர்.மேலும், இந்த வழக்கு சம்மந்தமாக மத்திய அரசு, டெல்லி மாநில அரசு, தொல்லியல் துறை,  உள்ளிட்ட அனைத்து தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்க விரும்புவதாகவும், நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.தற்போது டெல்லி மாநகராட்சியை தன்வசப்படுத்திய பிஜேபி, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முழு ஆதரவளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 1 0 1 2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக