திருச்சி: முன்னாள் தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு தம்பி ராமஜெயம் கொலை செய்யப் பட்டதில் புதிய திருப்பமாக அ.தி.மு.க பெண் கவுன்சிலரிடம் விசாரணை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பியான ராமஜெயம் திருச்சியில் வாக்கிங் சென்றபோது கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் காவல்துறையினர் பிரேத பரிசோதணை செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இக்கொலை வழக்கில் புதிய திருப்பமாக தூத்துக்குடி மாநகராட்சியின் 9வது வார்டு உறுப்பினர் சாந்தி, மற்றும் அவரது கணவர் மணிவண்ணன் ஆகியோரிடம் . திருச்சி தனிப்படை காவல்துறையினர் திருச்சி அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக