சனி, ஏப்ரல் 07, 2012

பிரான்ஸ் அணு உலையில் விபத்து! கதிர்வீச்சு பீதியில் மக்கள்!

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் அணு உலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதால் அதில் இருந்து கதிர்வீச்சு நிறைந்த திரவம் வெளியேறியது தெரியவந்துள்ளது.
பிரான்சின் பென்லி நகரிலுள்ள அணுமின் நிலையத்தில், திடீரென 2 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.அணுஉலையை குளிர்விக்கும் திரவம் வெளியேறியதே இந்த விபத்திற்கு காரணம் எனவும், தீ விபத்து ஏற்பட்ட உடனே அணுஉலை இயக்கம் நிறுத்தப்பட்டதாகவும்
அதிகாரிகள் கூறினர்.

அணு உலையிலிருந்து கசிந்த கதிர்வீச்சு நிறைந்த திரவத்தை பாதுகாப்பாக சேகரித்துவிட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி அச்சப்படத் தேவையில்லை எனவும் கூறுகின்றனர்.இந்நிலையில் அணு உலையில் கதிர்வீச்சுத் திரவம் கசிந்தது பற்றி விசாரணை நடத்த பிரான்ஸ் நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதால் கதிர்வீச்சு கசிவை குறித்த அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

என்ன தான் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், அவற்றில் ஏற்படும் விபத்துக்களால் நொடிப்பொழுதில் கதிர்வீச்சு ஏற்படுவதை  தடுக்க முடியவில்லை. வளர்ந்த நாடுகளில் பல அடுக்கு பாதுகாப்புடன் இயங்கும் அணு உலைகள்கூட இதற்கு விதிவிலக்கல்ல.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக