மாஸ்கோ:ரஷ்யாவில் மிகவும் பிரபலமான இஸ்லாமிய அமைப்பான இஸ்லாமிக் கல்சுரல் செண்டர் ஊழியரும், மார்க்க அறிஞருமான மத்தீன் மக்தியேவ் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். மத்திய மாஸ்கோவில் உள்ள அவரது வசிப்பிடத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொலைச் செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டார். வலதுசாரி தீவிரவாதிகள்தாம் இவரது படுகொலைக்கு காரணம் என்று கருதப்படுகிறது. இஸ்லாமிக் கல்சுரல் செண்டரை கடந்த ஆண்டு ரஷ்ய அரசு தடைச் செய்தது. சோவியத் யூனியனின் உளவு அமைப்பான கே.ஜி.பியின் துணை
அமைப்பான ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீசின் பழி வாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதிதான் இயக்கத்திற்கு விதித்த தடை என்று இஸ்லாமிக் கல்சுரல் செண்டர் கூறியிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக