வியாழன், ஏப்ரல் 12, 2012

ஹைதராபாத்:வகுப்புவாத கலவரம் குறித்து விசாரணை நடத்த எஸ்.டி.பி.ஐ கோரிக்கை !

புதுடெல்லி:போலீஸ் படையில் ஹிந்துத்துவா சக்திகளின் ஆதிக்கத்தின் தெளிவான ஆதாரம்தான் ஹைதராபாத்தில் சில தினங்களுக்கு முன்பு நடந்த வகுப்புவாத கலவரம் என்று சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கூறியுள்ளது. இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: முஸ்லிம்கள் அதிகமான பகுதிகளில் ஹிந்துத்துவாவாதிகள் தீவிரமாக தாக்குதலை கட்டவிழ்த்து விட்டபொழுது
போலீஸ் பார்த்துக்கொண்டு சும்மா நின்றுள்ளது. ஹைதராபாத் போலீஸை ஹிந்துத்துவாவின் ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்க ஆந்திரபிரதேச முதல்வர் முன்வர வேண்டும். இக்கலவரம் குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தவேண்டும்.
வகுப்புவாத கலவரத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், ஹிந்துவாஹினி, துர்காவாஹினி ஆகிய அமைப்புகள் உள்ளன.
ஹனுமான் ஜெயந்தி தொடர்பாக வி.ஹெச்.பி தலைவர் பிரவீன் தொகாடியா, முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிராக நடத்திய உணர்ச்சியை தூண்டும் உரைதான் கலவரத்திற்கு காரணமானது. தொகாடியா மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் தயாராகவில்லை. இவ்வாறு இ.அபூபக்கர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக