வியாழன், ஏப்ரல் 12, 2012

ஈரான்:இஸ்ரேலுடன் தொடர்புடைய தீவிரவாத கும்பல் கைது !

Iran arrests terror operatives tied to Israelதெஹ்ரான்:இஸ்ரேல் உளவாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவும் ஈரானில் தீவிரவாத குழுவின் உறுப்பினர்களையும் கைது செய்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனமான இர்னா கூறுகிறது. தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய வேளையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத குழுவின் தலைவரிடமிருந்து வெடிக்குண்டுகளும், எந்திர துப்பாக்கிகளும் கைப்பற்றியதாக ஈரானின் உளவுத்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் கூறுகிறது.

பாதுகாப்பு காரணங்களால் கைதானவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. முன்னர் ஈரானின் அணு விஞ்ஞானிகளை குண்டுவெடிப்புகளின் மூலம் கொலைச் செய்ததன் பின்னனியில் இஸ்ரேல் செயல்பட்டுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக